கடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட ) . இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . சில தினங்களுக்கு முன்பு இந்த மின்சார சேமிப்பை குறித்து எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் , இந்த கட்டுரை எழுதலாம் என முற்ப்பட்டேன் .
மின்சாரம் பொதுவாக யூனிட் என்ற அளவுகளில் நாம் அறிந்திருக்கிறோம் . அந்த யூனிட் அளவுகளுக்கு தான் நாம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம் . எனவே யூனிட் என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ளுவோம் . மின்சாரத்தை நாம் WATTS ( பல்புகளில் பார்ப்போமே ) என்ற அளவுகளில் கணக்கிடுகிறோம் . ஒரு மணி நேரத்தில் 1000 வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அதுவே ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது . இதை ஒரு கிலோ வாட் என்றும் அழைக்கலாம் .