செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

செலக்சன் ஆப் ஒயரிங்

ஒரு குறிப்பிட்ட வகை ஒயாரிங்கை தேர்ந்தெடுக்கும் முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒயரிங் செய்து முடிக்க ஆகும் செலவு.

ஒயரிங் செய்யக்கூடிய இடத்தின் தட்பவெப்ப நிலை.

தேவைப்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த்.

தீப்பிடிக்க கூடிய வாய்ப்புகள்.

செய்து முடிக்கப்பட்ட பின் கிடைக்க வேண்டிய தோற்ற அமைப்பு.

எதிர்காலத்தில் ஏதேனும் புதிய சப்-சர்க்யூட்கள் அமைப்பதற்கான வழி வகை.

பழுதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அமைப்பு.

ஒயரிங் சிஸ்டம்

சப்ளையை மெயினிலிருந்து பல பகுதிகளுக்கும் பின்வரும் மூன்று முறைகளில் கொண்டு செல்லலாம்.

Tree System Ring Main System Distribution Board System

ட்ரி சிஸ்டம் (Tree System)
மெயின் சர்க்யூட்டில் இருந்து நமக்கு தேவைப்படகூடிய இடத்தில் டேப்பிங் எடுத்து சப்-சர்க்யூட்கள் அமைக்கும் முறையாகும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சோலார்

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.

CFL-ஆ, டியூப் லைட்டா?!

CFL-தான் சிறந்தது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், ஹாலிலோ அல்லது பெரிய அறைகளிலோ CFL பல்புக்களை மாட்டினால் தூங்கி வழிகிறது! என்னதான் 20W அல்லது 30W CFL வாங்கிப் போட்டாலும், ஒரு சாதாரண டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடித்துக்கொள்ள முடியாது! 9W CFL பல்ப்பின் வெளிச்சம், 40W குண்டு பல்ப்பின் வெளிச்சத்துக்கு  ஒப்பானது என்று வாங்கும்போது  நமக்கு பல்பு கொடுக்கிறார்கள்! :D ஆனால், அதுவோ ஒப்புக்குத்தான் வெளிச்சம் தருகிறது. பால்கனி, சிறிய அறை, குளியலறை, கழிவறை இவற்றிற்கு மட்டும்தான் இவை உகந்தது என்று நினைக்கிறேன்! 5W மஞ்சள் நிற CFL-ஐ படுக்கையறையில் போட்டால், அந்த மந்த வெளிச்சத்தில் உடனே தூக்கம் வந்து விடுகிறது!

சனி, 10 ஆகஸ்ட், 2013

ப்ளோரசண்ட் லேம்ப்

இத்தகைய லேம்ப் ஹாட் கேத்தொடு டைப் ஆகும். இவை குறைந்த அழுத்த வகையாக இருப்பதால் நீண்ட கண்ணாடி குழாய் வடிவத்தில் அமைக்கப்பட்டு குழாயின் உட் புறத்தில் புளோரசண்ட் பவுடர் பூசப்பட்டு அதனுள் பதரசமும் சிறிதளவு ஆர்கான் வாயுவும் அடைக்கப்பட்டிருக்கும். சப்ளை கிடைத்தவுடன் துவக்கத்தில் பாதரசம் திரவ நிலையில் இருப்பதால் ஆர்கான் வாயு மூலம் கன்டக்சன் நடைபெறுகிறது. இந்த நீண்ட கண்ணாடி குழாயின் இரு புறத்தில் இரு டங்ஸ்டன் பிளமெண்ட்கள் உள்ளன. டங்ஸ்டன் வெப்பப்படுத்தும் போது அதிக அளவில் எலக்ட்ரான்களை வெளியிடுவதற்காக அதன் மீது பேரியம் ஆக்ஸைடு பூசப்பட்டிருக்கும். டியூப்லைட் ஒளிர துவக்கத்தில் சுமார் 1000 வோல்ட்டும். எரியத் துவங்கிய பின் ஆப்ரேட்டிங் வோல்டேஜ் 110 V கொடுக்க ஒரு சோக் காயிலும், குளோ டைப் ஸ்டாட்டர் ஒன்றும் சீரிஸ்-ஆக இணைக்கப்பட்டிருக்கும்.

வீட்டு வயரிங் - பகுதி.11

2-வே சுவிட்ச் இணைப்பை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக வீடுகளில் படுக்கை அறை, வராண்டா, மாடிப்படி ஆகிய இடங்களில் உள்ள விளக்குகளுக்கு 2-வே சுவிட்ச் பயன்படுத்தப்படும். படுக்கை அறையை பொறுத்தவரை மின் விசிறிக்கும் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு வராண்டா விளக்கு இணைப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த சர்கியூட்டிற்கு 2-வே (Two Way) சுவிட்ச் இணைப்பு எப்படி கொடுக்கப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அதன் உபயோகம் இவற்றை பார்க்கலாம்.

வீட்டு வயரிங் - பகுதி.10

மின் பழுதுகளை பற்றியும் அவற்றை நீக்குவது பற்றியும் இனி பார்க்கலாம். பொதுவாக பழுதுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1).ஷார்ட் சர்க்கியூட் (Short Circuit), 2). லூஸ் காண்டாக்ட் (Loose Contact), 3).மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள்.

வீட்டு வயரிங் - பகுதி.9


முந்தைய பதிவுகளில் பீங்கானால் செய்யப்பட்ட பியூஸ் யூனிட்களை சப்ளையின் மெயின் பியூஸ் யூனிட்டாகவும், செக்சன் பியூஸ் யூனிட்டாகவும் பயன்படுத்தப்படுவதை பற்றி பார்த்தோம். தொழில் நுட்பம் வளர வளர, சாதனங்களில் மாற்றம் வருவது இயற்கையே. அதன்படி பீங்கானினால் ஆன பியூஸ் யூனிட்களுக்கு பதிலாக Miniature Circuit Breaker (MCB), Isolator, Earth Leakage Circuit Breaker (ELCB) / Residual Current Circuit Breaker(RCCB) என பல சாதனங்கள் இப்பொழுது கிடைக்கிறது. இவற்றின் செயல்பாடு, பயன்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

டியூப் லைட்

இந்த பதிவில், டியூப் லைட் எப்படி இயங்குகிறது என்பதையும் அதன் வயரிங் இணைப்பையும் இப்பொழுது பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் டியூப் லைட் பட்டி (பிட்டிங்ஸ்) காண்பிக்கப்பட்டுள்ளது. டியூப் லைட்டை மாட்டுவதற்கு இரு புறமும் ஹோல்டர்கள், ஒரு சோக், ஒரு ஸ்டார்ட்டர் ஃபேஸ், ஸ்டார்ட்டர் & டியூப் (படத்தில் காண்பிக்கப்படவில்லை) ஆகியவை உள்ளன.

வீட்டு வயரிங் - பகுதி.8

மூன்று அறைகள் கொண்ட வீட்டின் 3-பேஸ் மின் இணைப்பில், பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை எப்படி பொருத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் இந்த சுவிட்ச் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வீட்டு வயரிங் - பகுதி.7

முந்தைய பதிவில் மூன்று அறைகள் கொண்ட வீட்டிற்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான வயரிங்கை எவ்விதம் மெயின் போர்டு அல்லது மீட்டர் போர்டில் செய்ய வேண்டும் என்பதை பார்த்தோம். இனி அதே வீட்டிற்கு 3-பேஸ் மின் இணைப்பிற்கு எவ்விதம் வயரிங் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கிள் பேஸ் இணைப்பில் வீட்டின் மூன்று அறைகளுக்கும்(சர்கியூட்) தனித்தனி பியூஸ் யூனிட் வழியாக லைன் சப்ளையை கொண்டு சென்றோம். 3-பேஸ் மின் இணைப்பில், ஒவ்வொரு பேஸ் சப்ளையையும் தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்

வீட்டு வயரிங் - பகுதி.6

இந்த தொடர் பதிவின் 5-வ்து பகுதியில், ஒரு அறையில் எவ்வாறு கன்சீல்டு வயரிங் செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளேன். இவ்வாறு மூன்று அறைகளிலும்(உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே மூன்று அறைகள் கொண்ட வீட்டையே குறிப்பிட்டுள்ளேன்) வயரிங் செய்யப்படும். ஒவ்வொரு அறையிலிருந்தும் சப்ளை வயர்கள் தனித்தனியாக, தனித்தனி பைப் மூலம் மெயின் போர்டு வைக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வரப்படும். சிலர் பைப் செலவை குறைக்க ஒரே பைப்பில் மூன்று அறைகளுக்கும் உரிய சப்ளை வயர்களை கொண்டு வருவார்கள். கீழே உள்ள படம் அதை காட்டுகிறது.