புதன், 28 ஆகஸ்ட், 2013

எலக்ட்ரிக் சாக்

ஆல்டர்னேட்டர், டிரான்ஸ்பார்மர் இவைகளின் நியூட்ரல் ஆனது எர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஒரு மின் கடத்தியாதலால், மின்சாரத்துடன் நம் உடம்பு தொடர்பு கொள்ள நேரிடும்போது, நம் வழியாக மின்னோட்டம் எர்த்தை அடைகிறது. நம் உடலில் மின்தடை அளவு குறைவாக இருப்பதால் மின்னோட்டம் பாய்கிறது. இதன் காரணமாக நமது இதயம், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது.

மின்னோட்ட அளவைப் பொறுத்து காயங்களோ, இதய செயல்பாடு நிருத்தம் அடைவதோ அல்லது உடனடி மரணமோ ஏற்படலாம்.

பொதுவாக நமது உடலின் மின்தடை அளவு ஈரமாக இருக்கும்போது 1000Ω எனவும், ஈரமில்லாதபோது 80000Ω எனவும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உடல்நிலையைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

மின் உபகரணங்களை பழுது பார்க்கும்போது

அவற்றின் இயங்கு முறை பற்றி தெளிவாக தெரிந்திருத்தல் வேண்டும். பழுதடைந்த ஒயர், பிளக், சுவிட்ச் போன்றவைகள் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். சப்ளையுடன் இயந்திரத்திற்குரிய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர்தான் வேலையைத் துவக்க வேண்டும். பிளக் ஒயர்களை பிடித்து இழுக்கக் கூடாது. வேலை முடிந்த பின் எர்த் சரியாக இணைக்கப்பட்டுள்ளத என சரிபார்க்க வேண்டும்.

மின்சார சிக்கனம்

இல்லம் மற்றும் வணிகம்
தேவை உள்ள இடங்களில் தேவையான நேரங்களில் மட்டும் மின்சாரத்தை உபயோகிப்பீர். தரகுள்ள மின் சாதனங்களை உபயோகிப்பீர். பழுதடைந்த மின் சாதனங்களை உடனுக்குடன் சரி செய்வீர். குளிர் சாதன பெட்டியை அடிக்கடி திறப்பதை தவிர்ப்பீர். குழல் விளக்குகளுக்கு எலக்ட்ரானிக் சோக் உபயோகிப்பீர். சாதாரண துழல் விளக்குகளுக்குப் பதிலாக கையடக்க குழல் விளக்குகளை உபயோகிக்கவும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஸ்டெபிலைசர் உபயோகிக்கவும். வீட்டின் உள்புறம் வர்ணம் பூசும்போது மிதமான (Light Colour) வண்ணம் உபயோகியுங்கள்.

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

தொழிற்சாலையில் புகை பிடிப்பதை தவிர்க்கவும், அஜாக்கிரதையாக வீசப்பட்ட புகை வஸ்து ஆபத்தான தீ விபத்தினை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எரிபொருட்களை கொண்டு இயக்கப்படுகின்ற பெட்ரோல் இஞ்சின், டீசல் இஞ்சின் போன்றவைகளின் அருகில் சிகரெட், தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு போன்றவைகளை கொண்டு செல்லக்ககூடாது. உடைந்த மின் சுவிட்சிகளை தொடாதீர், உடனே மாற்ற ஏற்பாடு செய்யவும். மின்சாதனங்களிலோ, மின்சாரம் செல்லும் ஓயார்களிலோ தீப்பிடித்துக் கொண்டால் அந்த தீ விபதிதால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்செதத்தை தவிர்க்க உடனடியாக Main Switch-யை off செய்ய வேண்டும். எனவே Main Switch-கள் இருக்கின்ற இடத்தை ஒவ்வொரு தொழிலாளர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எரிசக்தி சேமிப்பு வழிமுறைகள்

தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின் சேமிப்பில் சிறந்த வழி. குளிர்பதன பெட்டியினை, சுவற்றில் இருந்து 30 செ.மீ தள்ளியும் வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகாமையில் இல்லாதவாறும் பொருத்தப்பட வேண்டும். கோடை வெப்பத்திலிருந்து விடுபட முதலில் உட்கூரை மின் விசிறி (சீலிங் பேன்) அல்லது மேசை விசிறியினைப் (டேபிள் பேன்) பயன்படுத்தலாம். உட்கூரை மின் விசிறிகளைப் பயன் படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு முப்பது பைசாக்கள் செலவாகும்.

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா இதோ சில டிப்ஸ்!!!

தமிழகத்தில் தற்போது எந்த வியாபாரம் நன்றாக நடக்கிறதோ இல்லையோ இன்வெர்ட்டர் வியாபாரம் தூள் கிளப்புகிறது.மின் தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும்,வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம்.

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்

இது ஒரு இண்டகிரேட்டிங் டைப் இன்ஸ்ட்ருமென்ட் ஆகும். இந்த வகை இன்ஸ்ட்ருமென்டில் டிரைவிங், பிரேக்கிங், ரெக்கார்டிங் டிவைஸ்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

மின் திறனையும், அது பயன்படுத்தப்படும் காலத்தையும் பெருக்கினால் கிடைப்பது மின் ஆற்றல் ஆகும். இதனை அளக்க எனர்ஜி மீட்டர் பயன் படுகிறது. இது எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்சன் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

சீரிஸ் மேக்னட் (Series Magnet)
ஒர் அயன்கோரில் தடித்த ஒயரால் சில சுற்றுகள் கொண்ட காயிலாக சுற்றப்பட்டு லோடுக்கு சீரிஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது.

ஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring System


லீக்கேஜ் (Leakage)

பேஸ் ஒயரிலிருந்து நியூட்ரல் ஒயருக்கோ, எர்த் கன்டக்டருக்கோ அல்லது அருகில் உள்ள மெட்டலுக்கோ மின் கசிவு ஏற்படுவதையே லீக்கேஜ் கரண்ட் எனக் குறிப்பிடுகிறோம்.

கொடுக்கப்படும் வோல்டேஜ்-யை தாங்கும் அளவிற்கு கன்டக்டரின் மேலுள்ள இன்சுலேஷன் இல்லாதிருத்தல்.

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiring

ஏசி மற்றும் டிசி சர்க்யூட்கள் தனித்தனியாக ஒயரிங் செய்யப்பட வேண்டும். டிசி சர்க்யூட்டில் +ve ஆனது சிவப்பு நிறத்திலும், -ve ஆனது கருப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.

ஏசி-யில் மூன்று பேஸ்கள் தலா சிவப்பு, மஞ்சள், நீளம் நிறத்திலும், நியூட்ரல் கருப்பு  நிறத்திலும்,  எர்த் பச்சை மற்றும் மஞ்சள் (கிரீனிஸ்-எல்லோ) நிறத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

செலக்சன் ஆப் ஒயரிங்

ஒரு குறிப்பிட்ட வகை ஒயாரிங்கை தேர்ந்தெடுக்கும் முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒயரிங் செய்து முடிக்க ஆகும் செலவு.

ஒயரிங் செய்யக்கூடிய இடத்தின் தட்பவெப்ப நிலை.

தேவைப்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த்.

தீப்பிடிக்க கூடிய வாய்ப்புகள்.

செய்து முடிக்கப்பட்ட பின் கிடைக்க வேண்டிய தோற்ற அமைப்பு.

எதிர்காலத்தில் ஏதேனும் புதிய சப்-சர்க்யூட்கள் அமைப்பதற்கான வழி வகை.

பழுதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அமைப்பு.