திங்கள், 17 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.5

minsaraulagamஎலெக்ட்ரிக்கல் வயர்களின் முனையில் அதன் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பிகளை எடுத்து சுவிட்ச், சாக்கெட் போன்றவற்றில் இணைக்கும் பொழுது, ஒரு வயரின் ஏதாவது ஒரு கம்பி மற்ற வயரின் இணைப்பை தொட்டுவிடும் வகையில் இருக்கக்ககூடாது. அப்படி இருந்தால் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும். ஒவ்வொறு வயரிலும் மெல்லிய செப்பு கம்பிகள் பல இருக்கும். இவற்றின் எண்ணிக்கையும் கனமும் அந்த வயரின் கெப்பாசிட்டியை (மின் கடத்தும் திறன்) பொருத்து மாறுபடும். அதனால் எப்பொழுதும் வயரின் நுனியில் இன்சுலேஷனை நீக்கியவுடன், செப்பு கம்பிகளை நன்றாக முறுக்கி(TWIST) விட வேண்டும். படத்தை பார்க்கவும்.



இனி வீடு, கட்டிடங்கள் இவற்றில் எலெக்ட்ரிக்கல் வயரிங் எப்படி செய்யப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். வீட்டில் பல அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையின் வயரிங்கும் தனித்தனியாக செய்யப்படும். பின் அனைத்து அறைகளின் வ்யரிங்குகளுக்கு மின் இணைப்பு கிடைக்க- பேஸ், நியூட்ரல், எர்த் ஆகியவை ஒவ்வொரு அறைக்கும் மெயின் போர்டிலிருந்து கொண்டு செல்லப்படும். இப்பொழுது காங்கிரீட் ரூஃப் போடப்படுவதால் வயரிங் வெளியே தெரியாத வகையில் சுவர் மற்றும் ரூஃப் இவற்றின் உட்புறம் பைப் பதிக்கப்பட்டு வயரிங் செய்யப்படுகிறது. வீடு கட்டும் போதுதான் இந்த முறையில் வயரிங் செய்ய முடியும். இது கன்சீல்டு வயரிங்(CONCEALED WIRING) என சொல்லப்படும். கட்டிடம் கட்டி முடித்த பின்னர், சுவர் மற்றும் ரூஃப்-ல் வெளிப்புறமாக பைப் மாட்டி செய்யப்படும் வயரிங் "ஓபன் வயரிங்" ஆகும். கீழே உள்ள படத்தில்(பட்ம்.1) கன்சீல்டு வயரிங் முறையில், வீட்டின் மூன்று அறைகளில் உள்ள சுவிட்ச் போர்டுக்கு மின் இணைப்பு கிடைக்க மெயின் போர்டிலிருந்து எவ்விதம் தனித்தனியாக பி.வி.சி பைப் போடப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

minsaraulagam
இவ்விதம் மெயின் போர்டிலிருந்து தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும்(சர்க்கியூட்) கொண்டு செல்லப்படும் பேஸ், நியூட்ரல், எர்த் ஆகிய மூன்று வயர்கள் அடங்கிய தொகுப்பு "ரன் ஆஃப்(RUN OFF)" என சொல்லப்படும்.

minsaraulagamகீழே உள்ள படம் (படம்.2) ஒரு அறையில் பொருத்த வேண்டிய இரண்டு டியூப் லைட்டுகள், ஒரு பேன், ஒரு சாதா பல்பு இவற்றிற்கான வயரிங்கை செய்ய ரூஃப்-ல் எப்படி பைப் போடவேண்டும் என்பதை காட்டுகிறது. இவ்வாறு போடப்படும் பைப்புகளின் நுனியில் ஒரு பி.வி.சி பெண்ட்-ஐ போட்டு சுவற்றில் விட்டு விட வேண்டும். இதை இந்த படத்தில் காட்ட முடியாது என்பதால் படம் 4, 5-ல் காட்டப்பட்டுள்ளது.




minsaraulagamஇப்பொழுது கீழே உள்ள படத்தை பாருங்கள். மேலே குறிப்பிட்ட படம், அறையில் பொருத்த வேண்டிய இரண்டு டியூப் லைட்டுகள், ஒரு சீலிங் ஃபேன், ஒரு சாதா பல்பு ஆகியற்றிற்கான வயரிங்கை காட்டுகிறது. இந்த வயர்கள் எல்லாம் சீலிங்கில் போடப்பட்டுள்ள பி.வி.சி பைப்-ன் உட்புறம் செல்லும். இவற்றின் நுனிகள் பைப்பின் நுனியில் மாட்டப்பட்டுள்ள பெண்ட் வழியாக சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள பைப் வழியாக சுவருக்குள் வரும். அந்தந்த லைட், பேன் பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ள பிவி.சி ஜங்ஷன் பாக்ஸ் வழியா வெளியே வந்து, அதன் மீது பொருத்தப்பட்டுள்ள சீலிங் ரோஸ்-ல் இணைக்கப்படும். அதிலிருந்து டியூப்லைட், ஃபேன் ஆகியவற்றிற்கு வெளிப்புறமாக இணைப்பு கொடுக்கப்படும். சுவிட்ச் போர்டிலிருந்து வரும் நியூட்ரல் வயர்(கருப்பு நிற வயர்) 4-வே ஜங்ஷன் பாக்ஸ்-க்குள்ள் வந்தவுடன் அது நான்கு கருப்பு வயர்களுடன் இணைக்கப்பட்டு டியூப் லைட், ஃபேன், லை ஆகிய வற்றிற்கு செல்கிறது. அதாவது இந்த வயர்கள் சுவிட்ச் போர்டிலிருந்து வரும் நியூட்ரல் வயருடன் ஜாயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது இணைக்கப்பட வேண்டிய வயர்களின் நுனியில் உள்ள பி.வி.சி ஸ்லீவ் நீக்கப்பட்டு செப்பு கம்பிகள் ஒன்றாக நன்கு முறுக்கப்படும். அந்த பகுதி இன்சுலேஷன் இல்லாமல் இருக்கும். எனவே அப்பகுதியை பி.வி.சி. இன்சுலேஷன் டேப் மூலம் சுற்றிவிட வேண்டும். இவ்விதம் ஒரு நியூட்ரலில் இருந்து பல பாய்ண்ட்களுக்கு(லைட், டியூப் போன்றவைகள்) நியூட்ரல் எடுத்தால் அது, பொது நியூட்ரல் (Common Neutral) என சொல்லப்படும்.



minsaraulagam சுவிட்சு போர்டு உள்ள சுவரும் எதிர்புறத்திலுள்ள சுவரும், ரூஃப்-ம் காட்டப்பட்டுள்ளது. அந்த அறைக்கு மெயின் சப்ளையை கொண்டு வரக்கூடிய பைப் ரூஃப் வழியாக பெண்டுடன் மாட்டப்பட்டு, பைப் மூலம் சுவிட்சு போர்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு புரியும் வகையில் சீலிங்கில் போடப்படும் பைப்புடன் பெண்ட் இணைக்கப்பட்டு சுவருக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் கீழே படம் தரப்பட்டுள்ளது. வயரிங்-க்கு உபயோகிக்கும் பைப் வளையும் தன்மை கொண்டதல்ல. இதை ரிஜிட் பைப் (REGID PIPE) என சொல்லுவார்கள்.


minsaraulagam
அடுத்த பதிவில் சந்திப்போம்...........

2 கருத்துகள்:

mas சொன்னது…

Good. Excellent. House Plumbing details if written will be very useful.
Hameed D.E.C.E
Coimbatore

minsaraulagam சொன்னது…

tanks .... for reading friends.
will be add and written House Plumbing details