சனி, 29 ஜூன், 2013

தடையில்லா மின்சாரம் சாத்தியமா?


தடையில்லா மின்சாரம் சாத்தியமேஎப்படி?

தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?…. இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான  கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை…. எட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

மின்சாரம் பற்றிய வரலாறு -5

மின்சார சோதனைகள் 1771 ம் வருடம் ஒரு புது திருப்பு முனை அடைந்தன. லுய்கி கால்வானி என்ற இத்தாலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் லேடன் குடுவைகளுடன் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் உயிரியல் ஆராய்ச்சியில் சில தவளை கால்களுடனும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவைகளுக்கும் மின்சாரத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை. என்ன நடந்தது ? லேடன் குடுவையிலிருந்து ஒரு மின்பொறி ஒரு தவளை காலை தாக்கியது. தாக்கியதும் அந்த தவளை கால் துடித்தது. கால்வானி ஆச்சரியப்பட்டார். உயிருள்ள தசைகள் மட்டுமே இவ்வாறு துடிக்கும். மின்பொறி உயிரற்ற தசைகள் உயிருள்ளது போல் நடக்க வைத்தது. மின்சாரத்துக்கும் உயிருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ? மின்னல் ஒரு பெரிய மின்சார பொறி என்று ப்ராங்கலின் சோதனையிலிருந்து கால்வானி அறிந்திருந்தார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -4

minsaraulagamமின்சார சோதனைகளின் செய்தி அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவை அடைந்தது. பென்சில் வேனியா என்ற இடத்தில் 1747 ம் வருடம் பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்கர் ஒரு லேடன் குடுவையை பெற்றார். எங்கிருந்து மின்சாரம் வருகிறது என்பது அவருக்கு வியப்பு ஊட்டியது. கண்ணாடியை உரசினால் மின்சாரம் நிரம்புகிறது. அது உரசின கையில் இருந்து வந்ததா ? கைக்கு எங்கிருந்து மின்சாரம் வந்தது ? பூமியிலிருந்தா ? பிராங்களின் இதை சோதிக்க விரும்பினார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -3

கிரேயின் பரிசோதனைகள் செய்தி ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவியது, பிரான்ஸ் நாட்டில் சார்லஸ் பிரான்சில் டூ பே என்ற பிரஞ்சுகாரர் தானே சில சோதனைகளை செய்ய ஆரம்பித்தார். 1733 வருடம் டூ பே ஒரு தக்கையை எடுத்து அதை மெல்லிய தங்கத்தால் பூசினார். அந்த தக்கையை மேலிருந்து ஒரு பட்டு நூலால் தொங்கவிட்டார். தக்கையை ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியால் தொட்டால் தக்கையின் தங்க முலாம் பகுதி முழுவதும் மின்சாரம் பரவியது தக்கை நல்ல கடத்தி என்பதால் இது நடந்தது. கடத்தியையும் தங்க முலாமையும் பட்டு நூல் மட்டும் தான் தொட்டது. அதனால் மின்சாரம் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

மின்சாரம் பற்றிய வரலாறு -2

கெரிக்கின் சோதனைக்கு பிறகு மக்களுக்கு மின்சாரத்தின் மேல் ஆர்வம் வந்து அதை பற்றி அறிய ஆரம்பித்தார்கள். ஸ்டீபன் கிரே என்ற ஆங்கிலேயர் தானும் சில சோதனைகளை மேற்கொண்டார். அவர் கண்ணாடியை ‘எலக்டிரிக்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார் அது பெரிய அளவிலும் மலிவாக கிடைத்தது. கெரிக்குக்கு கண்ணாடி ஒரு நல்ல ‘எலக்டிரிக்’ என்று தெரிந்து இருந்தால் அவர் அதை உடைத்து இருக்க மாட்டார். கண்ணாடி உபயோகித்து கந்தகத்தை தவிர்த்து இருப்பார். கிரே ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு காலி கண்ணாடி குழாயை தேய்த்தார். அது இறகுகளை ஈர்த்தது தேய்க்கல் மின்சாரம் அதில் ஏறி இருந்தது. கண்ணாடி குழாய் இரண்டு முனைகளிலும் திறந்து இருந்ததால் தூசி முதலியவை அவருடைய சோதனையை கெடுக்கும் என்ற கிரே எண்ணினார். அதனால் இருமுனைகளிலும் கார்க் கொண்டு அடைத்தார். (தக்கை) என்ன ஆச்சரியம் தக்கையும் இறகுகளை ஈர்த்தது.

மின்சாரம் பற்றிய வரலாறு -1

minsaraulagam   இப்போதைய துருக்கியின் மேற்கு கடற்கரை ஓரம் இருந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன் மின்சாரத்தின் கதை ஆரம்பமாகிறது. அந்த இடத்தில் மக்னேசியா என்ற ஒரு நகரம். அங்கு மக்கள் கிரேக்க மொழி பேசினார்கள் . அங்கு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுகளை பார்த்து கொண்டிருந்தான் கல்சுவர்கள், தடுப்புகள் ஏறுவதற்கு அவன் ஒரு இரும்பு நுனி வைத்த ஒரு கழியை உபயோகித்தான் .

வெள்ளி, 28 ஜூன், 2013

வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.  நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும் வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார் அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக  கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

ஷாக் அடித்தால் என்ன செய்வது?

  
minsaraulagam
இன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம். என்றாலும், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம்.

மின்விபத்து ஏற்படுவது ஏன்?

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது.

மின்சாரம்

 விஞ்ஞானம் இல்லாத உலகத்தை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! பைத்தியம் பிடித்துவிடும்! உலகை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் ஒரே சக்தி விஞ்ஞானம்தான். விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ மின்சாரம் இல்லாமல் சாத்தியமா? இல்லை அல்லவா? எனவே, நவீன உலகில் அனைத்துக்கும் அடிப்படையான பரமாத்மா என்றால் அது மின்சாரம்தான். ஆகவே அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பயப்படவேண்டாம். ஷாக் அடிக்காத மொழியில் எளிமையாகவே மின்சாரத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளமுடியும். மின்சாரம் என்றால் என்ன என்பது தொடங்கி மின் உற்பத்தி, மின்சார சேமிப்பு வரை அனைத்தைக் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது இந்த தளம். தொடர்ந்து பார்வையிட்டு பின்னுடம் இடவும் நன்றி,

திங்கள், 17 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.5

minsaraulagamஎலெக்ட்ரிக்கல் வயர்களின் முனையில் அதன் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பிகளை எடுத்து சுவிட்ச், சாக்கெட் போன்றவற்றில் இணைக்கும் பொழுது, ஒரு வயரின் ஏதாவது ஒரு கம்பி மற்ற வயரின் இணைப்பை தொட்டுவிடும் வகையில் இருக்கக்ககூடாது. அப்படி இருந்தால் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும். ஒவ்வொறு வயரிலும் மெல்லிய செப்பு கம்பிகள் பல இருக்கும். இவற்றின் எண்ணிக்கையும் கனமும் அந்த வயரின் கெப்பாசிட்டியை (மின் கடத்தும் திறன்) பொருத்து மாறுபடும். அதனால் எப்பொழுதும் வயரின் நுனியில் இன்சுலேஷனை நீக்கியவுடன், செப்பு கம்பிகளை நன்றாக முறுக்கி(TWIST) விட வேண்டும். படத்தை பார்க்கவும்.

வீட்டு வயரிங் - பகுதி.4

இந்த பதிவில் முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களை பற்றி பார்க்கலாம். பல்பை பொருத்துவதற்கு ஹோல்டர் (HOLDER) பயன்படுகிறது. பட்டன் ஹோல்டர்,  ஆங்கிள் ஹோல்டர்,   பென்டன் ஹோல்டர் என மூன்று வகைப்படும். படத்தை பார்க்கவும்.