சனி, 28 செப்டம்பர், 2013

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்

* தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது, அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
* கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.
* எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்

சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்கவைக்க வேண்டும். 

ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங் களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகு லேட்டர் வால்வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.    

காஸ் அடுப்பு டிப்ஸ்

நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை  திருப்பாமல்    பார்த்துக் கொள்ள வேண்டும். 

சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சனி, 14 செப்டம்பர், 2013

வீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க

வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..! ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்! 'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு... 

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ‘புதுமனை புகும் விழா’ வுக்குச் சென்றிருந்தேன். “3 படுக்கை அறைகள் – with attached bath…… வீடு முழுவதும் சுமார் 100 மின்சார இணைப்புகள்… plug points,  மின்விளக்கு, மற்றும் மின் விசிறி வசதியுடன்…….நீங்கள் எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும்  படிக்கலாம்; உங்கள் தலைக்கு மேல் மின் விளக்கு, மின் விசிறி இருக்கும். கைபேசியை சாரஜ் செய்யலாம்….”என்று பெருமையுடன் வீட்டைச்சுற்றி காண்பித்தார். 
நம் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்பது பெரிய மகிழ்ச்சி தரும் விஷயம் தான். ஆனால் அத்தனை வசதிகளும் மின்சார கட்டணமாக நமக்கே திரும்பி வரும்போதுதான்  ஒவ்வொரு வசதிக்கும் நாம் கொடுக்கும் விலை என்ன என்று தெரியும். நாம் ஒவ்வொருவரும் நமது வருவாயில் 6% முதல் 12% வரை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதிலும், அவற்றை பராமரிப்பதிலும், அவற்றுக்கான கட்டணங்களை கட்டுவதற்கும் செலவிடுகிறோம். வாழ்க்கைத்தரம் உயர உயர இந்தச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே  போகிறது.

மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'

 திருச்சி: மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கமின் விபத்துகளை தவிர்க்க தேவையான சில முக்கிய வழிமுறைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மின்சாரம் தாக்கி காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில்கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சாலைகளில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொது மக்கள் அதன் அருகில் செல்லவோஅதனை தொடவோ கூடாது. அது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்சாரம் என்றால் என்ன ?

மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே)மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியை பெறுகிறது.

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது
இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.
• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.
• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சில வேளைகளில் பாரிய ஒரு புயல்காற்று அல்லது விபத்து ஒன்றினால் மின்சாரம் பாயும் கம்பிகள் சேதமடையும் பொழுதுமின்சக்தி நின்று விடும். மின்சாரத்தை வழங்கும் நிறுவனம் திருத்த வேலைகளைச் செய்வதற்காக மின்வழங்குவதை நிறுத்தி விடும் சந்தர்ப்பத்திலும்பரவலான மின்துண்டிப்பு ஏற்படலாம். மின்சாரத்தை வழங்கும் வியாபார நிறுவனம் முடிந்த அளவு விரைவாக மின்சாரம் மீண்டும் வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யும். இருந்தபோதிலும், மின்சக்தி திரும்புவதற்குச் சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்கள் கூட எடுக்கலாம். இப்படியாக மின்சாரம் தடைப்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும் .

சூரிய மின்சாரம் கைகொடுக்குமா?

By என். ராமதுரைDINAMANI.COM

கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னணியில் பலரும் தெரிவித்த ஒரு யோசனை பெரிய அளவில் சூரிய மின்சாரத்தின் பக்கம் திரும்பலாமே என்பதுதான். சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இது நன்கு நிரூபணமான ஒன்று. இதைத்தான் சூரிய மின்சாரம் என்கிறார்கள்.  சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல. 1958}ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றும் வகையில் பறக்கவிடப்பட்ட வான்கார்ட் என்ற அமெரிக்க செயற்கைக்கோளில்தான் சூரிய மின்பலகை முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.