மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்போம்.
சனி, 29 செப்டம்பர், 2012
வியாழன், 27 செப்டம்பர், 2012
மிக்ஸி
ஆங்கிலத்தில் ‘மிக்ஸ்’ என்றால் கலப்பது என்று பொருள். ஆனால் இந்த மிக்ஸி என்னும் கருவி அதற்குமேல் பல காரியங்களைச் செய்கிறது. மின்சாரம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தபின் உருவாக்கப்பட்ட பல வீட்டு உபயோகக் கருவிகளில் இந்த மிக்ஸியை முக்கியமானது என்று சொல்லலாம்.
இதுபோன்ற கலக்கும் கருவி ஆரம்பத்தில், முட்டையை உடைத்து அதன் கருவை நன்கு அடித்துக் கலக்க என்று உருவாக்கப்பட்டது. அங்கிருந்து வளர்ச்சி பெற்று, பழங்களை அரைத்து ஜூஸ் உருவாக்கக்கூடியதாக மாற்றம் பெற்றது. பின் தயிர் கடைய, மாவு அரைக்க, உலர் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை அரைக்க என்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.
அடிப்படையில் இந்தக் கருவியில் இருப்பது இரண்டு முக்கியமான பாகங்கள்: ஒரு மின்சார மோட்டார், பிளேடு (Blade) எனப்படும் பல்சக்கரம்.
மின்சார மோட்டார் என்ற கருவிக்குள் மின்சாரம் செல்லும்போது அதில் உள்ள ரோட்டார் எனப்படும் உருளை வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். செலுத்தப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் இந்த ரோட்டாரின் வேகத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். சுழலும் இந்த உருளையுடன் பல் சக்கரத்தை இணைத்தால் மிக்ஸி, ஜ்யூசர், ஃபுட் பிராசஸர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கருவி தயார்.
அடுத்தது இந்தப் பல் சக்கரம். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாடிகளை எல்லாம் எடுத்து அதில் உள்ள பல் சக்கரங்களைப் பாருங்கள். அவற்றில் ஒருவித சிம்மெட்ரி (சீரொருமை) இருக்கும். இரண்டு பற்கள் இருந்தால் அவை எதிரெதிராக 180 டிகிரி தள்ளி இருக்கும். மூன்று பற்கள் இருந்தால் 120 டிகிரி தள்ளி ஒவ்வொன்று என்று இருக்கும். பற்கள் எப்படி நீட்டிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓரம் எப்படி கூர்மையாக அல்லது ரம்பத்தின் முனைபோல உள்ளது என்பதைப் பார்வையிடுங்கள்.
இந்தப் பல் சக்கரம்தான் பொருள்களை வெட்டுகிறது; அரைக்கிறது; கரைக்கிறது. இந்தச் சக்கரம் ஒரு ஜாடிக்குள் இருக்கும். அந்த ஜாடிக்குள் பொருள்களைப் போட்டு மூடியபிறகே, மோட்டாரை இயக்குவோம். மோட்டார் இயங்கும்போது பல்சக்கரம் அதிவேகத்தில் சுழலுகிறது.
பல்சக்கரத்தில் மாட்டிய பொருள்கள் - திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி - தூக்கி அடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் ஒரு முக்கியமான இயல்பியல் அடிப்படையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கனம் குறைந்த பொருள்கள் மையப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், கனம் அதிகமான பொருள்கள் வெளிப்புறத்தை நோக்கிச் செல்லும். இது ‘மைய விலகு விசை’ காரணமாக நடக்கிறது.
பருப்பை அரைத்துப் பொடியாக்கும் எண்ணத்துடன் வறுத்த துவரம் பருப்பை மிக்ஸியில் போடுங்கள். கனமான முழுப் பருப்பும் படு வேகத்தில் பல்சக்கரத்தில் அடிபட்டு சுவற்றில் மோதி மீண்டும் உள்ளே திருப்பி அடிக்கப்பட்டு, மீண்டும் பல் சக்கரத்தில் மோதும். இப்படி நடக்கும்போது அது தெறித்து உடையும். அப்படி உடைவதில் பெரிய துகள்கள் மீண்டும் மீண்டும் வேகமாகச் சுவற்றில் மோதி உள்ளே வந்து உடைபடும். சிறிய துகள்கள் மையப்பகுதியிலேயே இருக்கும்.
மிக்ஸியால் என்ன சாதிக்கமுடியும் என்பது அதன் பல்சக்கரங்களின் வடிவமைப்பு சார்ந்தது. தக்காளி ஜூஸ் போட மிக எளிதான இரண்டு பல்களைக் கொண்ட சக்கரம் போதும். ஆனால் தோசைக்கு மாவரைக்க இந்தப் பல் சக்கரம் போதாது. சொல்லப்போனால், மிக்ஸியில் தோசை அரைப்பதைவிட கிரைண்டர் எனப்படும் கல் உரலில் அரைப்பதுதான் சரி.
அம்மா (அல்லது அப்பா!) சமையலறையில் வேலை செய்யும்போது எட்டிப் பாருங்கள். மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அதனை ஒருவிதமான ஜாடியில் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அந்தப் பொடியை ரசத்தில் சேர்ப்பார். மறுபக்கம் இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீர் சேர்த்து இன்னொரு ஜாடியில் அரைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் செய்வார். உலர்ந்த பொருள்களை பொடியாக அரைக்க ஒருவிதமான பல் சக்கரம் தேவை. ஈரமான பொருள்களை விழுதாக, துவையல்போல அரைக்க சற்றே வேறு விதமான பல் சக்கரம் தேவை.
பொதுவாக அமெரிக்காவில் விற்கப்படும் மிக்ஸி அல்லது ஃபுட் பிராசஸரைக் கொண்டு இந்தியச் சமையலுக்குத் தேவையான அரைத்தல்களைச் செய்வது எளிதல்ல. இந்தியாவில் இந்தியச் சமையலுக்கென பிரத்யேகமாக மிக்ஸிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வலு அதிகமான மோட்டார் இருக்கும். பலவித வேகங்களில் சுழலும் மோட்டார் இது. பல்சக்கரங்களும் அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
மிக்ஸி புழக்கத்துக்கு வருவதற்குமுன்னர், இந்திய அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியைப் பயன்படுத்தினர். இன்று அம்மி, கல்லுரல், உரல்-உலக்கை ஆகிய சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதிலாக மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சமையல் அறையில் வேலை நிச்சயம் எளிதாக ஆகியுள்ளது.

புதன், 12 செப்டம்பர், 2012
பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்
1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
டியூப்லைட்
சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள் . அப்படியும் முடியவில்லையெனில் கட்டுரையின் இறுதியில் உள்ள வழியை முயற்சிக்கவும்.
1. விளக்கு எரியவில்லை.
சுட்ச் போடவும்.
2.விளக்கு எரியத்துவங்குவதற்கான அறிகுறிகளே இல்லை.
அ. எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா?
ஆ. ஸ்டார்டர் சரியாக பொருந்தியுள்ளதா?
இ. பல்ப் நல்ல நிலையில் உள்ளதா?
ஈ. சோக் நல்ல நிலையில் உள்ளதா?
உ. கெப்பாசிட்டர் நன்றாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
3.விளக்கின் இருபக்கமும் சிவப்பு நிறத்தில் எரிகிறது?
அ.பிரகாசமாக எரிய வாய்ப்பில்லை. ஸ்டார்டரை மாற்றவும்.
4. விளக்கின் ஒரு பக்கம் மட்டும் எரிந்து விளக்கு முழுவதும் எரிய வாய்ப்பில்லை?
அ. கனெக்சனை சரி பார்க்கவும்.
ஆ. ஸ்டார்டரை மாற்றவும்.
5. விளக்கு விட்டு விட்டு எரிகிறது.?
அ. டி யூப் லைட் பரிசோதிக்கவும்.
ஆ. இணைப்புகளை சரிபார்க்கவும்.
இ. ஸ்டாடரை மாற்றவும்.
ஈ. சோக்கை பரிசோதிக்கவும்.
உ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.
6. எரிந்து கொண்டிருந்த விளக்கு விட்டு விட்டு எரிதல்.
அ. டி யூபை பரிசோதிக்கவும்.
ஆ. ஸ்டாடரை மாற்றவும்.
இ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.
7. விளக்கில் வளை வளைவுகளாக ஒளிக்கற்றை நகர்தல்.
அ. புதிய விளக்குகளில் வர வாய்ப்புண்டு. ஆதலால் விளக்கை ஆப்
செய்து விட்டு சிறிது நேரம் கழித்து ஆன் செய்யவும். அப்போதும்
அப்படியே இருந்தால் டியூப் லைட்டை மாற்றவும்.
8. விளக்கு எரிய தாமதமாகுதல்?
அ. சோக்கை சோதிக்கவும்.
ஆ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.
9. சுவிட்ச் ஆன் செய்தவுடன் பியூஸ் ஆகிவிடுதல்?
அ. இணைப்புகளில் எர்த் ஆகியிருக்கலாம். பரிசோதிக்கவும்.
ஆ. சோக் எர்த் ஆகியிருக்கலாம் . பரிசோதிக்கவும்.
10. வெளிச்சம் திடீரென குறைதால்?
அ. டியூபின் ஆயுட்காலம் முடியும் சமையம். இணைப்புகளை
சரிபார்த்து வேறு டியூப் லைட் மாற்றவும்.
11. புதிய விளக்கு சில நாட்களிலேயே எரியவில்லை?
அ. அளவுக்கு அதிகமான திறன் கொண்ட சோக்காக இருக்கலாம்.
சோக்கை மாற்றவும்.
ஆ. வோல்டேஜ் அதிகமாக இருக்கலாம்.
சுய சோதனைகள்.
சோக்குகளை பரிசோதித்தல்.
சோக்குடன் சீரிஸ் முறையில் ஒரு சாதா பல்பை (குண்டு பல்ப்)
இணைத்து ஆன் செய்யும்போது பல்ப் டிம்மாக எரிந்தால் சோக்
நல்ல நிலையில் உள்ளது எனவும்., பிரகாசமாக எரிந்தால்
அல்லது எரியவில்லையென்றால் சோக் பழதாகிவிட்டது என
அறியலாம்.
ஸ்டார்டர்களை பரி சோதித்தல்.
ஸ்டாடருடன் சீரிஸ் முறையில் ஓரு சாதா பல்பை இணைத்து
ஆன் செய்யும் போது பல்ப் விட்டு விட்டு எரிந்தால் ஸ்டாடர்
நல்ல நிலையில் உள்ளது எனவும், தொடர்ந்து சீராக எரிந்தால்
ஸ்டாடர் பழுது அடைந்துள்ளது என்றும் அறியலாம்.
மேற்கண்ட முயற்சியில் டியூப்லைட் எரியவில்லை யெனில் வேறு ஓரு
புதிய டியூப் லைட் செட் வாங்கி மாற்றிவிடவும்.
ஏஸி பராமரிப்பது ஈஸி!
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லைஎன்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி?
காருக்குள் நாற்றம்!
காருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம், இங்கே ஏற்படும் அதிகப்படியான ஈரப் பதத்தால், பாக்டீரியாக்கள் தங்க வசதியாக அமைந்து விடுகிறது. இதை நீங்களே சுத்தப்படுத்த முடியாது. பூஞ்சானம், கிருமிகள் தங்குவதைத் தடுப்பதற்கு ஏ.ஸியில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அதனால், காரை வீட்டில் நிறுத்தப்போகும் முன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஏ.ஸியை ஆஃப் செய்து விடுங்கள். அப்போதுதான் ஏ.ஸியில் இருக்கும் எவாப்ரேட்டர் ஈரத்தை ஈர்த்து, பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்கும்.
ஏ.ஸி எஃபெக்ட் இல்லை!
ஏ.ஸி எஃபெக்ட்டாக இல்லை என்றால், காரை ஆன் செய்து விட்டு தெர்மா மீட்டரை ஏ.ஸி வென்ட்டில் வைத்து செக் செய்யுங்கள். ஆறு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது என்றால், ஏ.ஸி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒன்பது டிகிரிக்கு மேல் இருந்தால், ஏ.ஸியில் பிரச்னை இருக்கிறது. ஏ.ஸியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கெட் மற்றும் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படும்.
இதனால், ரெஃப்ரிஜெரன்ட் கேஸ் அளவு குறையும். இதனால் ஏ.ஸி எஃபெக்ட் குறைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஏர் ஃபில்டரில் தூசு அடைத்திருந்தாலும், ஏ.ஸி எஃபெக்ட் குறையும். அதைச் சுத்தம் செய்யுங்கள். மிகவும் மோசமாக இருந்தால், ஏர் ஃபில்டரை மாற்றி விடுவதே நல்லது!
பெல்ட் மற்றும் கன்டென்ஸர்
ஏ.ஸி அதிக சத்தம் எழுப்பினால், அதிர்வுகள் இருந்தால் கம்ப்ரஸர் மவுன்ட்டிங்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கம்ப்ரஸர் பெல்ட் தளர்வாக இருக்கலாம். கன்டென்ஸர் காயிலில் தூசுகள் அடைத்திருந்தாலும், ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸ் குறையும். பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏ.ஸி மெக்கானிக்கை வைத்து ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸை செக் செய்யுங்கள். காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். அதேபோல், சூரியன் இருக்கும் திசையில் காரின் பின் பக்கம் இருக்கும்படி பார்த்து பார்க் செய்யுங்கள். காரை எடுத்தவுடனேயே ஏ.ஸியை ஆன் செய்யாதீர்கள். காரணம், ஏ.ஸியை முழுவதுமாக கூல் செய்யவே அதிகப்படியான சக்தி இழுக்கும். அது இன்ஜின் பர்ஃபாமென்ஸைப் பாதிக்கும். சிறிது நேரம் ஜன்னல்களை கீழே இறக்கி வைத்து காரை ஓட்டிவிட்டு, இன்ஜின் நன்கு சூடேறிய பிறகே ஏ.ஸியை ஆன் செய்யுங்கள்.
20 டிகிரிக்குக் கீழ் ஏ.ஸி டெம்ப்ரேச்சரை வைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! அதே போல், ஏ.ஸி வென்ட்டுகள் நேராக முகத்துக்கு அடிப்பது போலும் இருக்கக் கூடாது!
"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?
இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா? எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்!
இப்போது எங்கு பார்த்தாலும் விதவிதமான ஏ.சி.கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு அறையை குளிற வைக்கும் ஏ.சி., காற்றை சுத்தமாக்கும் ஏ.சி. என்று எத்தனையோ....
நீங்கள் வாங்கும் ஏ.சி. புதிது, உபயோகித்தது, பிராண்டட், அசம்பிள்டு என்று எதுவாக இருந்தாலும் சில குறிப்புகளை நினைவில் வைப்பது நல்லது.
ஜன்னலில் பொருத்தக் கூடியவை:
ஜன்னலின் கீழ் பாகத்தில் இது எளிதாக பொருந்திவிடும். இதற்காக சுவரை உடைக்க வேண்டிய அவசியமில்லை.
இதை எளிதாக கழற்றவும், மாட்டவும் முடியும். அதனால் வாடகைக்கு ஏ.சி. வாங்கினாலும், வாடகை வீட்டில் பொருத்த வாங்கினாலும், இதுவே சிறந்தது.
சுவரில் பொருத்தக் கூடியது:
இவை பார்ப்பதற்கு அழகானவை. ஆனால் விலை கொஞ்சம் கூடுதல்.
ஜன்னலை ஏ.சி.யால் அடைக்க விரும்பாதவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். வேண்டிய இடத்தில் பொருத்தலாம்.
வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சுவரில் துளை போட அனுமதிப்பார்களா என்பதை வாடகை வீட்டில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.
ஜன்னலில்/சுவரில் பொருத்தக் கூடியது:
வாடகை வீட்டில் இருக்கும்போது, ஜன்னலில் பொருத்திக் கொள்ளலாம். சொந்த வீட்டுக்கு மாறியவுடன் சுவரில் பொருத்தலாம்.
ஜன்னலிலும், சுவரிலும், பொருந்தக் கூடியது என்பதால் இது பலரால் விரும்பப்படுகிறது. ஆனால் இதன் விலையும் அதிகம்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
தேவையான அளவு அறை குளிர்ந்த பிறகு பொதுவாக கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆனால் ஏ.சி.க்கு உள்ளே இருக்கும் விசிறி வேலை செய்வதால் மின் கட்டணம் ஏறிக்கொண்டே போகும். கம்ப்ரெஸ்ஸர் நிற்கும் போது விசிறியும் நிற்பது போன்ற வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.
ஆஸிலேடிக் வெண்ட்ஸ் இருந்தால் வெளியே வரும் குளிர்ந்த காற்று அறை முழுக்க சீராக பரவும்.
ரிமோட் கன்ட்ரோல் வசதி இருந்தால் உட்கார்ந்தபடியே ஏ.சி.யை இயக்கலாம்.
டைமர் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏ.சி.யை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.
ஒன்று அல்லது இரண்டு வருடம் நிறுவனத்தின் உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு ஏ.சி.யை வாங்குவதே நல்லது.
மிக்ஸி பராமரிப்பு
1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.
3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.
4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.
5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடிக்கவே கூடாது. மிக்ஸி பிளே டுகள் மோட்டாரின் வேகத்தைப்பொறுத்தே நைசாக அரைக்கும்.
6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கிவிட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸி யில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்ட வும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.
7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தா ல் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.
8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.
9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவ னித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
10. மிக்ஸி ஓடும்போது மூடியைக் கை யினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.
11. அரைக்கும்போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டை ட்டு செய்து கொ ள்ள வேண்டும்.
12. மிக்ஸியில் ஜாரின் அடிப் பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற் கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதா கிவிடும்.
13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டா ர் எரியவோ நேரலாம்.
14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.

15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங் கல் அரிசி அரைக்கும் போது இர வே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.
https://vidhai2virutcham.wordpress.com/2012/08/01/மிக்ஸி-பராமரிப்பு/
சனி, 8 செப்டம்பர், 2012
கையைக் கடிக்குதா கரண்ட் பில்?
கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?
கணக்குமுக்கியம்!
ஒருயூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சாரவாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னுதெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ்பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒருயூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில்சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.
ஸ்டார்ரேட்டிங்!
மின்சாரத்தைசிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம். ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பா ஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும். இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயே போட்டிருக்கும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவானமின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட விலைகொஞ்சம் அதிகமா இருக்கும்! ‘அய்யோ விலை அதிகமா இருக்கே’னு அதை வாங்காமவிட்டுடாதீங்க. ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில்கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசாஇருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச்சேமிக்கலாம்னு பார்ப்போம்…
ரெஃபிரிஜிரேட்டர்!
24 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்!ஃப்ரிட்ஜைஅடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியேவச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.அதேமாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க. குறைந்தபட்சம் ஒரு நாள் ழுக்கபயன்படுத்தப் போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும். அணைத்து விட்டுமூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம்தேவைப்படும்.
ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றைசுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியேதள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.
ஏ.சி.!
எல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.ரூம்கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தாவெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல்மின்சாரம் தேவைப்படும்.அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவு – ஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்
வாட்டர்ஹீட்டர்!
தேவைப்படும்நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்கவேணாம். தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு மீண்டும் ஹீட்டர் தானாவே செயல்படஆரம்பிக்கும். அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஒரு ஆள்தான்குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்கவேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.
பல்ப்!
குண்டுபல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்குஅதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்பசக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல். (compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாகமாற்றுகிறது.படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்றமாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதை விட டேபிள் விளக்குகளைப்பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களைபயன் படுத்தலாம்.
அயர்ன்பாக்ஸ்!
தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.
மின்விசிறிகள்!
எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும் நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பழையரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது. மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிகதூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும். சுழல அதிக மின்சாரமும் தேவைப்படும்.
புதன், 5 செப்டம்பர், 2012
கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!
• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.
• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.
• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.
• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.
• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.
• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.
• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.
• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.
• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?
கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!
பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.
நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’
யார் நுகர்வோர்?
தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
கரண்ட் ஷாக் அடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
உங்கள் அருகில் இருப்பவருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்டவரை காப்பாற் றலாம்.
சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்கப்பட்டவ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள்.
மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள்.
பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி, காற்றோட்டமாக இருக்கும் படி செய்யவேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஷாக்கின் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து, வாந்தி எடுக்கு ம் நிலையில் இருப்பவரை, கால்கள் தரையில் இருந் து ஒரு அடி உயரத்தில் இருக்கும்படி மல் லாக்காக படுக்க வைக்க வேண்டும்.
மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி அதற்கான சிகிச்சை முறைகளை அளிக்கவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)