புதன், 5 செப்டம்பர், 2012

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?



உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம்.

சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள்.

மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள்.

பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி, காற்றோட்டமாக இருக்கும் படி செய்ய‍வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஷாக்கின் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து, வாந்தி எடுக்கு ம் நிலையில் இருப்பவரை, கால்கள் தரையில் இருந் து ஒரு அடி உயரத்தில் இருக்கும்படி மல் லாக்காக படுக்க வைக்க வேண்டும்.

மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி அதற்கான சிகிச்சை முறைகளை அளிக்க‍வேண்டும்.

கருத்துகள் இல்லை: