இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது
இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.
• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.
• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.
|
சனி, 14 செப்டம்பர், 2013
மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்
மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?
சில வேளைகளில் பாரிய ஒரு புயல்காற்று அல்லது விபத்து ஒன்றினால்
மின்சாரம் பாயும் கம்பிகள் சேதமடையும் பொழுது, மின்சக்தி நின்று விடும். மின்சாரத்தை வழங்கும் நிறுவனம் திருத்த வேலைகளைச்
செய்வதற்காக மின்வழங்குவதை நிறுத்தி விடும் சந்தர்ப்பத்திலும்பரவலான மின்துண்டிப்பு ஏற்படலாம். மின்சாரத்தை வழங்கும் வியாபார நிறுவனம் முடிந்த அளவு விரைவாக
மின்சாரம் மீண்டும் வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யும். இருந்தபோதிலும்,
மின்சக்தி திரும்புவதற்குச் சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்கள்
கூட எடுக்கலாம். இப்படியாக மின்சாரம் தடைப்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய
வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும் .
Labels:
உங்கள் கவனத்திற்கு,
டிப்ஸ்,
மின்சாரம்,
ரிப்பேர்,
வயரிங்
சூரிய மின்சாரம் கைகொடுக்குமா?
By என். ராமதுரைDINAMANI.COM
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்
பின்னணியில் பலரும் தெரிவித்த ஒரு யோசனை பெரிய அளவில் சூரிய மின்சாரத்தின் பக்கம்
திரும்பலாமே என்பதுதான். சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது நன்கு நிரூபணமான ஒன்று. இதைத்தான் சூரிய மின்சாரம் என்கிறார்கள். சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது
என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல. 1958}ஆம் ஆண்டில்
பூமியைச் சுற்றும் வகையில் பறக்கவிடப்பட்ட வான்கார்ட் என்ற அமெரிக்க
செயற்கைக்கோளில்தான் சூரிய மின்பலகை முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.
மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?
By சா. ஷேக் அப்துல்காதர் DINAMANI.COM
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம்
மின்தடை நடைமுறையில் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இது 11 சதவீதப்
பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது. இதன் காரணமாக நிரந்தரமான
மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச்
சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக்
கருதப்படுகிறது.
நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும் வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார் அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
புதன், 11 செப்டம்பர், 2013
மின்சாரம் தாக்கினால்..?
சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மின்சார விபத்துச் சூழல்களைத் தவிர்ப்பது குறித்தும் முதல் உதவிச் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன். ''பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது சமயோசிதப் புத்தியோடு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். மின்சாரத்தின் தாக்கம் எத்தனை அளவு (வோல்ட்) என்பதைப் பொருத்தும் உடலில் மின்சாரம் பாயும் பாதையின் மின் தடைத் திறனைப் பொறுத்தும் ஆபத்தின் அளவுகள் இருக்கும். குளியல் அறை, சமையல் அறை போன்ற ஈரமான சூழலில் உடல் மீது மின்சாரம்
INVERTER VS UNINTERRUPTED POWER SUPPLY (UPS) ஒரு ஒப்பீடு
நேர் மின்விசையை (Direct Current (DC) மாற்று மின்விசையாக (Alternator Current (AC)) உருமாற்றி வழங்கிடும் பணியினையே இன்வேட்டர் (Inverter) தடையற்ற மின்வழங்கியும் (Uninterrupted Power Supply (UPS) செய்கின்றன. ஆயினும் இவையிரண்டிற்கு முள்ள வேறுபாடுகள்தான் யாவை?
தலைகீழாக்கி (Inverter):முக்கிய பகுதி ,(மின்சுற்று(Circuitry)),மின்கலன் ஆகிய இரண்டும் சேர்ந்தகட்டமைப்பே ஒரு தலைகீழாக்கி (Inverter) யாகும்.இந்த மின்கலன்களானது ஈயமும் நீர்மமும் சேர்ந்த மின்கலன் ,பராமரிப்பு தேவையற்ற காய்ந்த கட்டை மின்கலன் என இரண்டுவகையாகவுள்ளன.
திங்கள், 9 செப்டம்பர், 2013
குக்கர் - இயங்குவது எப்படி?
இப்ப நாம் பார்க்கப்போறது, உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற்றி. ரொம்ப எளிமையான, அதேசமயம் ரொம்ப ரொம்ப உபயோகமான பாத்திரம் இது.பிரஷர் குக்கரின் வேலை அரிசி, பருப்பு, காய்கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும். அதுக்காக நீராவியை, அதாவது வாயு வடிவத்தில் இருக்கிற தண்ணீரைப் பயன்படுத்துகிறது குக்கர்.உணவுப் பொருள்களை வேகவைக்கிறதுக்கு நமக்கு குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத்தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும். ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் குக்கர் இருக்கிறது.
குக்கர் பராமரிப்பு
இன்றைக்கு
பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும்
குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர்
பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
வீட்டு வயரிங் பற்றிய தகவல்
பெரும்பாலும்
வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது.அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க் செய்யும் முறையில் நான் சொல்வதையும் சேர்த்தால் வேலை நன்றாக இருக்கும். அதாவது வீட்டு சுவரின் உள்ளாகவோ அல்லது சுவரின் வெளியாகவோ தான்
நாம் வயரின் செய்வோம்.
சனி, 7 செப்டம்பர், 2013
மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்
கடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட ) . இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . சில தினங்களுக்கு முன்பு இந்த மின்சார சேமிப்பை குறித்து எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் , இந்த கட்டுரை எழுதலாம் என முற்ப்பட்டேன் .
மின்சாரம் பொதுவாக யூனிட் என்ற அளவுகளில் நாம் அறிந்திருக்கிறோம் . அந்த யூனிட் அளவுகளுக்கு தான் நாம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம் . எனவே யூனிட் என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ளுவோம் . மின்சாரத்தை நாம் WATTS ( பல்புகளில் பார்ப்போமே ) என்ற அளவுகளில் கணக்கிடுகிறோம் . ஒரு மணி நேரத்தில் 1000 வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அதுவே ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது . இதை ஒரு கிலோ வாட் என்றும் அழைக்கலாம் .
மின்சார சேமிப்பு..!!
மின்சாரமே இல்லை அப்புறம் எப்படின்னு கேக்காதீங்க..!! இதை நாம ஒவ்வொருத்தரும் ஃபாலோ பண்ணுனா.. நிச்சயம் மின்தேவை/மின்பற்றாக்குறைய பாதியா குறைக்க முடியும்..!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)