ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?

"சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை."
வாஷிங்மெஷின்.... உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்...? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால்... வம்புப் பிரசாதமாகி, "ஏண்டா வாங்கினோம்" என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.

இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சுரமுத்து. இவர், சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் "ஸ்ரீசர்வீஸஸ்" என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது...எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, "இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை" என்று நீங்களே சொல்வீர்கள்!" என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

* அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் 'ராடு' போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loading) வாஷிங்மெஷின் என்று அழைப்போம். இதில், மேல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீ­ரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

என்ன விலை மெஷினே?

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன. 4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள். செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, 'சுவிட்ச் ஆன்' செய்ய வேண்டும்.

துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்... துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ... குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்­ணீர் வரும் என்றாலோ... செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.

* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

பயன்படுத்துவது எப்படி?

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு 'ஃபஸ்ஸி லாஜிக்' (Fuzzy logic) என்று பெயர். மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு 'நியூரோ ஃபஸ்ஸி' (Neuro fuzzy) என்று பெயர். இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

துவைச்சு, தூள் கிளப்புங்க!

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!

ஒல்லிக்குத்தான் மவுசு!

மின்சாரம் வந்த புதுசில் பயன்படுத்தப்பட்ட குண்டு பல்புகளையே இப்போதும் பயன் படுத்தி வருகிறோம். கேட்டால் குண்டு பல்புக்கு குறைந்த மின்சாரம் போதும் என்கிறோம். குண்டு பல்புக்கு பதிலா குறுகிய குழல் விளக்குகளை பயன்படுத்தலாம். குண்டு பல்பைவிட இந்த விளக்குகளில் 40 சதவீதம் மின்சாரம் மிச்சம்! குண்டு பல்பைவிட விலை கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்கும்.

ஏசியை எப்படிப் பராமரிப்பது?

ஏசியை எப்படிப் பராமரிப்பது? ஏர் கூலர் எப்படி? என்ன பிராண்ட்? என்ன விலை? (AC & Air Cooler)

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு ருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது. மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2 முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.

சனி, 22 டிசம்பர், 2012

மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்!


நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

1. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

2. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

3. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா…???

4. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

5. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா…??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா….???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி.. சாமக்கோடங்கி

வியாழன், 20 டிசம்பர், 2012

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?


ஆமாம் இந்த வாட் ஓம் ஆம்பியர் வோல்ட் இதெல்லாம் என்ன? இதை பத்தி தெரிஞ்சுக்கனும்னா கூகிலாண்டவர்கிட்ட கேட்டாப் போதும் பக்கம் பக்கமா லிஸ்ட் தருவார். ஆனா எதுலயும் நேரடியான விளக்கம் இருக்காது, சுத்தி வளச்சுத்தான் சொல்லி இருப்பாங்க எல்லாரும். நானும் அப்படித்தான் சொல்லப் போறேன். இது உங்களுக்கு பயனுள்ள பதிலா இருக்கானு நீங்கதான் சொல்லனும். :(

இதோ ஒரு சிம்பிளான பதில்:

மின் கடதிகள் எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் மின்மூலக்கூறுகளால்(movable charges) ஆனது. மின்னொட்டம்(current) என்பது இந்த மின் மூலகூறுகள் ஓடுவதால் ஏற்படுவது. மின்னழுத்தம்(வோல்ட்)       இந்த      ஒத்த      மின்       மூலக்கூறுகளை  ஒரிடதிலிருந்து இன்னொரு இடதிற்க்கு தள்ளும் வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு மின்கடதியும்(conductor) ஒரு குறிப்பிட்ட்ட அளவு தடையை இந்த மின்மூலக்கூறுகளின் ஓட்டதிற்க்கு அளிக்கிறது. இந்த தடையை(Resistance) மீறி மின்னூட்டங்கள்(charges) நகர்வதால் கடத்தியில் வெப்பம் உண்டாகிறது. எவ்வளவு மின்மூலக்கூறுகள் ஒரு நொடியில் நகர்கின்றன எனப்தை ஆம்பியர்(Amepre என்ற அலகால் அளக்கிறோம். அந்த நேரத்தில் பரிமாறப்படும் மின்சக்தியானது வாட்(Watt) என்றும், மின்தடை ஓம் (ohm) என்றும் அளக்கபடுகிறது. ஆம்ப்பியர், வோல்ட், வாட், ஓம் ம் சிம்ப்பிள்த்னே. இன்னும் கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.

முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!

மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).

ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.

வாட்:
“வாட்”(Watt)- இதுவும் மின்னியல் பொறுத்தவரை குழப்பமான ஒன்று, சரியாகப் புரிந்து கொண்டால் போதும். 40 வாட்ஸ் பல்பு, 60 வாட்ஸ் பல்புனு சொல்லுவாங்க, 1/2 ஹெச்பி(hp) மோட்டார்னு சொல்லுவாங்க. இதேல்லாம் மின்னாற்றலினை(electrical energy)க் குறிக்கும் அளவுகளே. மின்னுட்டங்கள் பாய்வதை மின்சாரம் என்கிறோம், இதன் அலகு ஆம்பியர் எனப் பார்த்தோம். இப்படி ஒன்றைச் சொல்லியதையே மறந்து விட்டு நமது பாடப்புத்தங்கள் மின்னூட்டங்கள் கடத்தியின் வழியே பாய்வதால் மின்னாற்றல் பாய்கிறது, இது வாட் என அளக்கப்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். 2 மார்க் வாங்கினாப் போதும்னு நினைக்கிற நம்மாளும் இதை மனப்பாடம் பண்ணி எழுதிட்டு போய்ட்டே இருப்பான். இத புரிஞ்சிக்கனும்னு முயற்சி பன்றவன் பைத்தியம் ஆகிடுவான். ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மின்னூட்டம் ஓடினா அதுக்கு மின்சாரம்னு பேருனு படிச்சிட்டு, திரும்ப அப்படி ஓடினா அதுக்கு இன்னொரு பேரு, இன்னொரு அலகுனு சொன்னா எது சரி? எது தப்புனு குழப்பம்தான் மிஞ்சும்.

வாட் என்பது மின்னாற்றல் பாய்வு வீதத்(flow rate)தை குறிக்கிறது. ஆனால் இங்கே பாய்வது என்ன? ஆற்றல். “வாட்” என்பது ஒரு வினாடி நேரத்தில் பாயும் மின்னாற்றலைக் குறிக்கும் ஒரு ஆடம்பரமான வார்த்தை(fancy word). அப்படியெனில் மின்னாற்றலின் அளவு என்ன?. எந்த வகையான ஆற்றலும் ஜூல்(Joule) எனற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு ஜூல் மின்னாற்றலை ஒரிடதிலிருந்து இன்னோரு இடத்திற்ற்கு மின்கடத்தியின் வழியாக பாயச் செய்யலாம். நீங்கள் ஒரு ஜூல் மின்னாறலை ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு மின்கடத்திக்யின் வழியே எடுத்துச் சென்றால், இந்த ஆற்றல் பாய்வு வீதம் 1ஜூல்/வினாடி, “ ஒரு ஜூல் /வினாடி என்பது ஒரு வாட்”

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?

இதுக்கு பதில் சொல்லனும்னா, உங்க வீடல இருக்கிற குண்டு மின்விளக்கை எடுத்துக்குவோம்(Bulb). அந்த மின்விளக்கை இனைக்கும் கடத்தியில்(Wire) மின்னூட்டங்கள்(Electrons) உக்காந்துட்டு முன்னோக்கியும் பின்னாடியும் அலஞ்சிட்டு இருக்கும். படத்தைப் பார்க்கவும். அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) . அதே நேரத்தில் மின்கந்தப் புலத்தால்(Elecromagnetic field) உருவான மின்காந்த அலைகள்(Electro magnetic waves) வேகமாக கட்த்தியில் முன்னேரிச் செல்லும். இந்த அலையில் உள்ள சக்தியானது(Energy) முன்னும் பின்னும் அலையாது, ஆனால் அது கடத்தி வழியாக ஓடி மினியற்றியில் இருந்து விளக்கிற்கு பாயும்.

சரி, இப்ப இந்த கேள்விய நீங்களே கேட்டுப் பாருங்க: மின்னோட்டம் (current) தான் மின்சாரமா(electricicty)?,

அப்படியெனில் நாம் மின்சாரம் கடத்தியின் உள்ளெ உக்காந்து கொண்டு முன்னும் பின்னும் ஓடிகொண்டிருகிறது.

அடுத்து இந்த கோணத்தில் பாருங்கள் அதை ஒரு ஆற்றலின் வடிவாக? . மின்சார்ம் என்பதை மின்னாற்றலாக எடுத்துக் கொண்டால் அது முன்னும் பின்னும் அலைய முடியாது கடத்தியினுள்ளே, அதற்க்கு பதிலாக அது மின்காந்த புலத்தை தோற்றுவித்து முன்னோக்கி ஓடுகிறது.

ஆனால் மேலே சொன்ன இரண்டையும் ஒரெ நேரத்தில் செய்கிறதா? அப்படியெனில் எது மின்சாரம்?

* முன்னும் பின்னும் அலையும் எலக்ட்ரான்களா?

இல்லை

*மிக வேகமா மின்காந்தபுல ஆற்றலா?

- புததகங்களில் தேடினால் முரனாண விளக்கங்கள்தான் உள்ளன.

யாராவது ஜெனரேட்டர் தான் மின்சாரதை உருவாக்குகிறதா என்றால்? மின்னியல் பற்றி நாம் தவறான கோனத்தில் இருக்கிரோம் என்று அர்த்தம்.


இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மின்னியல் என்பது மிகஎளிதானதே.பொதுவாக மின்சாரம் என்பதை பலரும் எப்படிச் சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்....? அதுல எது சரினு நினக்கிறீர்களே அதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அதுல் ஒன்னுதான் சரி மற்ற எல்லாம் தவறு.விஞ்ஞானிகள், தினசரி வாழ்க்கையில், பள்ளி அறிவியல் புத்தகத்தில் எல்லாம் இந்த மின்சாரத்திற்கு கொடுக்கும் வரையறைகள் என்னனு பாக்கலாமா?

ப்யூஸ்

மின்சாரம் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒன்றாகிவிட்டது வாழிக்கையில, அது இல்லாம அன்றாட வாழ்க்கைய ஓட்றது கொஞ்சம் கஸ்டம் தான். ஆனா என்ன ஒரு சின்னதா ப்யூஸ் போனாக் கூட , அத மாத்த யோசிக்கிற மக்கள் நிறையப் பேரு இருக்காங்க, காரணம் அதை பற்றிய பயம், சரியான புரிதல் இல்லாமைனு சொல்லலாம். பயப்படும் படியானா, இல்ல தொட்ட உடனே ஆளைக் காலி [பண்ணிடும் பயங்கரமான ஒன்னு இல்ல அது,

மின்சாரம் என்பது,,,,,

 1. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரை மின்சாரம் என்றால் ஒன்றே ஒன்றுதான்: எலக்ட்ரான்கள் என்னும் எதிர்மின் துகள்(negative charge) புரோட்டான்கள் என்னும் நேர்மின் துகள்(positve charge), அதவது மொத்தத்தில் மின்னூட்டங்கள்(Charges)

எ.கா:- மின்னோட்டம், மின்னோடத்தின் அளவு, எத்தனை கூலூம் மின்னூட்டம் ...

2.தினசரி வாழ்ழ்க்கையில் மின்சாரம் என்றால்: மின்கலத்தில் இருந்தும், மின் இயற்றியில் இருந்தும் அனுப்பப்படும் மின்காந்தபுல ஆற்றல்(electro magnetic field energy) .

எ.கா: மின்சார கட்டணம், kwh (கிலொ வாட் ஹவர்) மின்சாரம் (அதாவது ஒரு யூனிட் மின்சாரம்)

3. பள்ளி மாணவர்களுக்கு: மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஒட்டம்.

எ.கா: மின்னோட்டம், ஆம்பியர்...

4. மின்சாரம் என்பது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களுக்கு இடையில் மொத்த அளவில் உள்ள வேறுபாடு(amount of inbalance) .

எ.கா: நிலை மின்னூடம், மின்ன்னூட்டங்களை அகற்றுதல்(charge discharge)

5.மின்சாரம் என்பது வேறொன்றும் இல்லை மொத்தமாக மின்னூட்டங்களை அடிப்படையாக கொண்ட தத்துவங்கள்

எ.கா

உயிர்மின்னியல்(bio electricity),

பீசோ மின்னியல்(Pizo electricity),

வெப்ப மின்னியல்(thermo electricity),

வளிமண்டலத்தோடு தொடர்புள்ள

மின்னியல்(atmospheric electricity)...Etc..

6. மற்றும் சில பொதுவான வரையறைகள்

"மின்சாரம்" என்பது மின் ஆற்றல் பாய்வதைக் குறிப்பது(electric power, watts),

"மின்சாரம் " என்பது மின் அழுத்த வேறுபாடால் (potential diffrence)

உண்டாவது

"மின்சாரம்" என்பது வேறொன்றும் இல்லை அறிவியலின் ஒரு பிரிவு.


மேலே சொன்னது எல்லாம் மின்சாரத்தை பத்தி நமக்கு சொல்லப்பட்டவை, அல்லது நாம் படித்தவை. இதில் எது சரி? எந்த ஒரு வரையறைய நாம் எடுத்துக்கொள்வது? இல்லை எல்லாமே சரியானதா?

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?

இதோ எளிமையான பதில் இரண்டு முக்கியமானவை ஒரு கடத்தியின்(conductor) வழியே பாயும்.
அவை,
1.மின்னூட்டம் (eletric charge)
2.மின் சக்தி(Electrical Energy)

இதனுடன் சேர்ந்து வேறு சிலவும் கடத்தியில் பாயும், இப்பொதைக்கு எளிமையாக்க அதையேல்லாம் தவிர்த்து விடுவோம்.இரண்டு பொருள்கள் கடத்தியில் ஓடுகின்றது, இரண்டையுமே நாம் மின்சாரம் என அழைக்க முடியாது. இதயே காரணம் காட்டி அப்ப மின்சாரம்னா என்ன? அப்படினும் கேட்க கூடாது. அதற்க்கு பதிலாக

1. எந்த பொருள் பல்பி(bulb)னுள் கடத்தி வழியாகச் சென்று மீண்டும் வெளியே வருகிறது?

2. எந்த பொருள் பல்பினுள் சென்று ஒளி(light)யாக மாறுகிறது?

முதல் கேள்விக்கு பதில் #1 மின்னூட்டம் (Electric Charge).

மின்னூட்டம் என்பது பல்பின் வழியாக மின்சுற்றில்(circuit) பாயும் ஒரு பொருள். பொதுவாக இந்த செயலின் போது ஒரு மின் சுற்றில் மின்னுட்டம் இழப்பதுமில்லை, அதெ போல் மின்னுட்டம் பெறப்படுவதும் இல்லை. மேலும் மின்னூட்டம் மிக மெதுவாகப் பாயும், இன்னமும் சில நேரங்களில் கடத்தியில் ஓடாமல் ஒரே இடத்தில் இருக்கும். மாறுதிசை மின்னோட்ட மின்சுற்றில் மின்னூட்டம் முன்னோக்கி பாயாது. கடத்தியினுள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கேள்விக்கு பதில் # மின்சக்தி (Electric energy)

இதயே மின் காந்த சக்தி எனவும் அழைக்கலாம்.(Electro magnetic energy). இந்த சக்தியானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாயும். மிக வேகமாகச் செல்லக் கூடியது. சற்றேரக்குறைய ஒளியின் வேகத்தில் செல்லும். இதை ஒரு மின்சுற்றிலிருந்து ஆக்கவும் முடியும், இல்லை வேறு வடிவில் தொலைக்கவும் முடியும். அதாவது மின்விளக்கு கொண்ட மின் சுற்றில்(Circuit) மின்சக்த்தியானது ஒளி மற்றும் வெப்பமாக மாற்றப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரண்டுக்குமான வித்தியாசம்

மின்னூட்டம்(Electric charge)---------------------------------------------------------மின்சக்தி(Electro magnetic energy)

1)மிக மெதுவாகச் செல்லும். சில நேரங்களில் நின்று விடும் ------- எப்பொழுதும் வேகமாகச் செல்லும், ஒளியின் வேகத்திற்க்கு நிகராக.

2)இதன் ஓட்டம் மின்னோடாம்(electric current) எனப்படும்.ஆம்பியர்(Ampere) என்னும் அலகால்(Unit) அளக்கப் படுகிறது. -------
இதன் ஓட்டம் மின்சத்தி எனப்படுகிறது. வாட்(Watt) என்னும் அலகால் அளக்கப்படுகிறது

3)பல்பின் வழியாகப் பாய்ந்து செல்வது -------
பல்பினால் உபயொகப்படுத்தப் படுகிறது(அதாவாது ஒளியாக மாற்றப் படுகிறது.)

4)ஆடலோட்ட(AC) மின் சுற்றில் முன்னும் பின்னுமாக ஓடும். .-------ஆடலோட்ட(AC) மின் சுற்றில் தொடர்ந்து முன்னோக்கி பாயும்.

5)உலோகங்களில் இருந்து பெறப்படுகிறது. ---------
மின் இயற்றி(Generators), மின் கலம்(Battery)இவற்றிலிருந்து பெறப்படுகிறது.

6)இது ஒரு பொருளின் அடிப்படைத்துகள் ---------
இது ஒரு வகையான ஆற்றல்.

7)அடிப்படை துகள் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும். --------
இதன் அடிப்படை போட்டான்கள்(Photons) ஆகும்.

8)கடத்தியின் உள்ளே பாய்ந்து செல்வது -------
கடத்தியினைச் சுற்றியுள்ள வெளியில் பயனம் செய்வது.

9)சுழல் ஓட்டம்(Circular flow)ஒரு மின்சுற்றில் சுற்றிச் சுற்றி வரும் - --------
ஒரு முனை ஓட்டம்(one way flow)மின் மூலத்திலிருந்து(source) மின்சுமை(Load) நோக்கி பாயும்.

10) இயற்கையாகவே இருப்பது ---------
மின்சாரக் கம்பெனிகளால் உருவாக்கி விற்கப் படுவது.

11) பழைய விஞ்ஞானிகள் இதை மின்சாரம்(Electricity) என்றார்கள். ----------
புதிய முதலாலிகள இதை மின்சாரம் என்கிறார்கள்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-

6 ஆம் நூற்றாண்டு

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்ஸ் என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்ஸ் அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொருது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்ழழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்ஸ் கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

1720 ல்:- ஸ்டீபன் கிரெ(Stephen Gray) என்பவர் நிலை மின்னூட்டங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தமுடியும் என நிரூபித்தார்

1750 ல்:- பெஞ்ஜமின் பிராங்க்ளின் அவர்க்ளின் ஒரு Fluid theory of Electricity மின்னியலின் ஆறிவியல் பூர்வமான செயல்முறைகளை ஒருமுகப்படுதியது. இதுவே புதிய மின்னியல் அடிப்படைக் கொள்கைகள்உருவாக அடித்தளம் அமைத்தது.

1800ல்:- அலெஸ்ஸான்ட்ரோ வொல்டா அருடைய புதிய கண்டுபிடிப்பாக மின்கலத்தை மீண்டும் பாரசீகர்களுக்கு பின் 1800 ஆண்டுகள் களித்து அறிமுகப்படுதினார்.

1820ல்:- ஹான்ஸ் ஓர்ஸ்டட் மின்காந்த தன்மையை தன்னுடைய பிரபலமான "காம்பஸ்(Compus) மற்றும்மின்சாரம் பாயும் கடத்தி"(current carying wire) சோதனை மூலம் கண்டறிந்தார்.

ஆண்ட்ரு -மேரி ஆம்பியர் மின்சாரம் மற்றும் மின்காந்தம் இவற்ரை வரையறை செய்தார். மேலும் மின்னோட்ட்டத்தை அளவிடும் "அம்மீட்டர்" என்னும் கருவியையும் கண்டறிந்தார்.

ஜார்ஜ் ஓம் மின்சாரம் பறிய ஆய்வுகளை வெளியிட்டார், அதில் அவரது புகழ் பெற்ற ஓம்'ன் விதி (Ohm's law) யும் அடக்கம்.

1830ல்:- மைக்கெல் பாராடெ ஆட்டத்தில் இறன்கினார். மனிதகுலதின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த நவீன மின்னிய்ல் யுகம் தொடங்கியது....!

" No Cithy with out Electricity"


இன்னும் வரும்...

சனி, 20 அக்டோபர், 2012

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...


மின்விளக்குகள்

நீங்கள் பாவிக்கும் மஞ்சள் ஒளி மின் குமிழ்களைத் தவிர்த்து வெள்ளொளி மின் குமிழ்களை உபயோகிக்கவும். வெளிச்சம் தேவையான நேரங்களில் மட்டுமே மின் விளக்குகளைப் பாவியுங்கள்! நீங்கள் செலுத்தும் மின் கட்டணமானது, மின் விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் வலு, அவை பாவிக்கப்படும் நேரம் ஆகியவற்றில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்!

குளிர்சாதனப் பெட்டிகள்

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறக்க முதல் ஒரு கணம் சிந்தியுங்கள். வெளியில் எடுக்க வேண்டிய பொருட்கள் எவை? உள்ளே வைக்க வேண்டிய பொருட்கள் எவை? எனத் தீர்மானித்த பின்னரே கதவைத் திறக்க வேண்டும்.

அடிக்கடி கதவைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பழுதுகள் இருந்தால் உடனேயே திருத்திவிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியைப் பொருட்களால் நிறைக்கக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களிலோ, வெப்பம் பிறப்பிக்கப்படும் இடங்களிலோ குளிர்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கக்கூடாது.

மின்னழுத்திகள்

அழுத்தப்படுவதற்குக் குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளிலிருந்தே அழுத்த ஆரம்பிக்க வேண்டும். அதேபோல மின்னழுத்தியின் மின்னிணைப்பைத் துண்டித்த பின்னரும் அதன் வெப்பம் குறையும் வரை குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளை அழுத்த வேண்டும்.

அடிக்கடி மின்னழுத்தியைப் பாவிக்காமல், ஒரே தடவையிலேயே பல ஆடைகளை அழுத்தப் பழக வேண்டும். மின்னழுத்தியை ஒருபோதும் நிலைக்குத்தாக வைக்கக் கூடாது. நீராவி அழுத்திகள் சிக்கனமானவையாகும்.

வெப்பத்தைத் தெறிப்படையச் செய்யக்கூடியதாக அழுத்தும் மேசைகளின் மேற்பரப்பு அமைய வேண்டும். ஆடைகளை அழுத்த முதல் அவசியம் அழுத்த வேண்டுமா எனச் சிந்தித்து தேவையாயின் மட்டுமே அழுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகளும் கணினிகளும்

பலர் தொலைக்காட்சி பார்த்து முடிந்தபின் தொலை இயக்கியால் அதன் இயக்கத்தை நிறுத்திவிடுவர். அவ்வாறு தொலைக்காட்சியின் இயக்கம் நிறுத்தப்படும் போது அதற்குத் தேவையான வலு 7.3 w ஆகும். அதாவது மாதாந்தம் 5.3 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது-

ஆகையால் தொலைக்காட்சி பாவிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அதன் ஆளியைத் திறந்து மின்னிணைப்பைத் துண்டிப்பதன் மூலம் மின் சக்தியைச் சேமிக்கலாம்.

அதேபோன்ற செயற்பாட்டை (Standby) கணினியில் மேற்கொண்டால் கணினிக்குத் தேவையான வலு 60 w ஆகும். இதனால் மாதமொன்றிற்கு 43 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது. கணினிப் பாவனையாளர்கள் இதை உணர்வதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் விசிறிகள்

சாதாரண மின் விசிறிகளைவிட மேசை மின் விசிறிகள் சிக்கனமானவை. முன்னர் பாவனையிலிருந்த மின் விசிறிகள் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரேயளவிலான மின்சாரத்தையே உள்ளெடுக்கும். ஆனால், தற்போது பாவனையிலிருப்பவை அவ்வாறானவையல்ல.

மின் விசிறிகளிற்காகச் செலவாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, காற்றோட்டமான வீடுகளை அமைத்தலாகும். இல்லாத பட்சத்தில் காற்றுச் சீராக்கிகளைப் பயன்படுத்தியும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.


மூலம் : மின்வலு எரிசக்தி அமைச்சின் இணையத்தளம்

இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

     எமர்ஜென்ஸி ஃபேன்: டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்: மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்: வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்: வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை

Thanks : விகடன்