புதன், 5 செப்டம்பர், 2012

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

கரண்ட் பஞ்ச்

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?



உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம்.

சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள்.

மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள்.

பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி, காற்றோட்டமாக இருக்கும் படி செய்ய‍வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஷாக்கின் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து, வாந்தி எடுக்கு ம் நிலையில் இருப்பவரை, கால்கள் தரையில் இருந் து ஒரு அடி உயரத்தில் இருக்கும்படி மல் லாக்காக படுக்க வைக்க வேண்டும்.

மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி அதற்கான சிகிச்சை முறைகளை அளிக்க‍வேண்டும்.

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!

‘மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.  மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.  டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.  மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு ‘எர்த்’ கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.  வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.  கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.  மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.  கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.  மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும். மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.  ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இதுவரை 250 பிரதிகளைத்தாண்டி விறபனையில்


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே 


நமது வாழ்வில் இயந்திரம்(MACHINE) என்பது அன்றாட தேவையாகி விட்டது அதன் பயன்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, குறிப்பாக ஒரு இயந்திரம்(MACHINE) மின்(ELECTRICAL) அல்லது மின்ணணு(ELECTRONIC) பிரிவுகளில் தயாரிக்க படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதில் ஏற்படும் பழுதை எப்படி நீக்குவது என்பதும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுனுக்கம் தெரிந்தால் அந்த இயந்திரம்(MACHINE) பல ஆண்டுகள் பயன் தரும், அதனால் மின்(ELECTRICAL), இயந்திரம்(MACHINE) பற்றிய தகவல்களை உங்களிடம் தமிழில் பகிற இருக்கிறேன்.

இந்த தளத்தில் இதுவரை வெளியான 200 க்கும் மேற்ப்பட்ட கட்டுறைகளை மின்நூலாக தொகுத்துள்ளோம் தேவையானவர்கள் எங்களை 0091-8760546343 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப், டெலகிராம் முலம் மட்டும் தொடர்புக்கொள்ளவும் நன்றி.......

நன்கொடை ரூ 100 மட்டும்....

ஒவ்வருவரும் படித்து பாதுகாக்க வேண்டிய ஒரு அற்புதமான நூல் 

மின்நூலில் இடம் பெறும் கட்டுறைகளின் விபரம் .......



ஏசியை பராமரிப்பது எப்படி

ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை

குளிர்சாதனைப்பெட்டிஉங்கள் கவனத்திற்கு, பிரிட்ஜ்

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!சமையல் எரிவாயு, சிக்கனம்

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்ச

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?

பராமரிப்புபராமரிப்பு

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

குளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்?

த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்மோட்டார்

இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்

மிக்ஸி பயன்படுத்துவது எப்படிபராமரிப்பு, மிக்ஸி

டயோட் டெஸ்டர்எலக்ட்ரானிக், டூல்ஸ்

மோட்டார் குடும்பம்எலக்ட்ரிக்கல், மோட்டார்

எவர் வேண்டுமானாலும் கணக்கிடலாம்

வீட்டு மின்சார அளவுகள்எலக்ட்ரிக்கல், மின்சாரம்

SCR- டெஸ்ட்டர்எலக்ட்ரானிக்

மின்தடையின் மதிப்பு கானல்எலக்ட்ரானிக்

computer-ல் OS (operating system) போடும் முறைகள்கணினி

CHARGE & FLUX உருவாகும் விதம்எலக்ட்ரிக்கல், மின்சாரம்

அடிப்படை மின்னியல்எலக்ட்ரிக்கல், மின்சாரம்

சில அடிப்படை மின்னியல் சூத்திரங்கள்எலக்ட்ரிக்கல், வயரிங்

எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்காஸ் அடுப்பு, சமையல் 

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்காஸ் அடுப்பு

காஸ் அடுப்பு டிப்ஸ்காஸ் அடுப்பு, டிப்ஸ்

வீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க 

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்டிப்ஸ்

மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'

மின்சாரம் என்றால் என்ன ?

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சூரிய மின்சாரம் கைகொடுக்குமா?

மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

மின்சாரம் தாக்கினால்..?

INVERTER VS UNINTERRUPTED POWER SUPPLY (UPS) ஒரு ஒப்பீடு

குக்கர் - இயங்குவது எப்படி?

குக்கர் பராமரிப்புகுக்கர்

வீட்டு வயரிங் பற்றிய தகவல்டிப்ஸ்

மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்

மின்சார சேமிப்பு..!!உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்

மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.எலக்ட்ரிக்கல், கரண்ட் பில்

"இன்வெர்ட்டர்' பேட்டரிகளுக்கு தட்டுப்பாடுஇன்வெர்ட்டர்

இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு மிக்ஸி பயன்படுத்தலாமா?

டிரான்ஸ்பார்மர் டேப் சேஞ்சிங்

டிரான்ஸ்பார்மரை டிசி சப்ளையில் இணைத்தால் ஏற்படும் விளைவு

டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் இழப்புகள் - Losses in a Transformer

பேரலல் ஆப்ரேசன் ஆப் டிரான்ஸ்பார்மர் - Parallel Operation of Transformer

இன்ஸ்ரூமென்ட் டிரான்ஸ்பார்மர் - Instrument Transformerடிரான்ஸ்பார்மர்
பொக்கால்ஸ் ரிலே - Buchholz Relay

ஆட்டோ டிரான்ஸ்பார்மர் - Auto Transformer

EMF-யின் வகைகள்

டிரான்ஸ்பார்மர் கூலிங் சிஸ்டம்

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.2

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்

சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1சோலார்

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகமும் விளக்கமும்,

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

Do-It-Yourself.1KW-24V Solar Power System.Part.2

Do-It-Yourself.1KW-24V Solar Power System. Part.1

சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு
சூரிய ஒளி மின்சாரம்-பகுதி.10

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்சோலார்

பவர் டிரான்ஸ்பார்மர்

டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர்

ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர்

டிரான்ஸ்பார்மரின் வேலை

ஹை ரேட் டிஸ்சார்ஜ் செல் டெஸ்டர் - High Rate Discharge Cell Tester

எர்த்திங் - Earthing

எர்த்திங்கான விதிமுறைகள்

டபுள் எர்த்திங் - Double Earthingஎர்த், எலக்ட்ரிக்கல்

எர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்எர்த், எலக்ட்ரிக்கல்

பாலி பேஸ்-சிங்கிள் பேஸ்3 பேஸ், எலக்ட்ரிக்கல்

டிரான்ஸ்பார்மர்டிரான்ஸ்பார்மர்

ஹைட்ரோமீட்டர் - Hydrometerமீட்டர்

ப்பெரூல் கான்டாக்ட் கேட்ரிஜ் பியூஸ்பியூஸ்

கிட் - கேட் பியூஸ் - Kit-Kat Fuseபியூஸ்

கன்டக்டர், இன்சுலேட்டர்இன்சுலேட்டர், கன்டக்டர்

எலக்ட்ரிக் சாக்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு

மின் உபகரணங்களை பழுது பார்க்கும்போதுஉங்கள் கவனத்திற்கு

மின்சார சிக்கனம்டிப்ஸ்

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு
எரிசக்தி சேமிப்பு வழிமுறைகள்டிப்ஸ்

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்உங்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு

  
இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா இதோ சில டிப்ஸ்!!!இன்வெர்ட்டர், உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்சிறப்பு, டிப்ஸ்

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்வயரிங்

ஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring Systemவயரிங்

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiringவயரிங்

செலக்சன் ஆப் ஒயரிங்வயரிங்

ஒயரிங் சிஸ்டம்வயரிங்

சோலார்சோலார்

CFL-, டியூப் லைட்டா?!டியூப் லைட்

ப்ளோரசண்ட் லேம்ப்உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்

வீட்டு வயரிங் - பகுதி.11வயரிங்
மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகள்டிப்ஸ்

தடையில்லா மின்சாரம் சாத்தியமா? - 2மின்சாரம்

தடையில்லா மின்சாரம் சாத்தியமா?மின்சாரம்


மின்சாரம் பற்றிய வரலாறு -3மின்சாரம், வரலாறு

வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்டிப்ஸ்

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.டிப்ஸ், மின்சாரம்

ஷாக் அடித்தால் என்ன செய்வது?உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ்

மின்சாரம்சிறப்பு, மின்சாரம்

வீட்டு வயரிங் - 12 பகுதி  கொண்ட முழு தொகுப்பு


வீட்டுக்குறிப்புக்கள் மின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், பராமரிப்பு, மின்சாரம்

குளிர்சாதனைப்பெட்டிடிப்ஸ், பராமரிப்பு, பிரிட்ஜ்

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!சிறப்பு, பராமரிப்பு

டிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...டிப்ஸ், பராமரிப்பு

டிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், மின்சாரம்

டிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?உங்கள் கவனத்திற்கு, கரண்ட் பில், டிப்ஸ், பராமரிப்பு, மின்சாதனம், மின்சாரம்

டிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?டிப்ஸ், பராமரிப்பு

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!உங்கள் கவனத்திற்கு, டிப்ஸ், பராமரிப்பு

ஏசியை எப்படிப் பராமரிப்பது?உங்கள் கவனத்திற்கு, பராமரிப்பு

மின்சாரம் ஒரு கண்ணோட்டம்!மின்சாரம்

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?மின்சாரம்

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?மின்சாரம்

ப்யூஸ்உங்கள் கவனத்திற்கு, ரிப்பேர்

மின்சாரம் என்பது,,,,,மின்சாரம்

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?மின்சாரம்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-வரலாறு

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...மின்சாரம்

இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்கரண்ட் பில், மின்சாரம்

இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்?உங்கள் கவனத்திற்கு

மிக்ஸிமின்சாதனம்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்பராமரிப்பு

டியூப்லைட்ரிப்பேர்

ஏஸி பராமரிப்பது ஈஸி!பராமரிப்பு

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?மின்சாதனம்

மிக்ஸி பராமரிப்புபராமரிப்பு

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?கரண்ட் பில்

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!பராமரிப்பு

கியாரண்ட்டிஎன்றால் உத்திரவாதம்என்பது வாரண்டி என்றால்?மின்சாதனம்

கரண்ட் பஞ்ச்

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?மின்சாரம்

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!சிறப்பு


ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிசன்மேதைகள்

மேலும் பல ......................................