புதன், 11 செப்டம்பர், 2013

INVERTER VS UNINTERRUPTED POWER SUPPLY (UPS) ஒரு ஒப்பீடு

நேர் மின்விசையை (Direct Current (DC) மாற்று மின்விசையாக (Alternator Current (AC)) உருமாற்றி வழங்கிடும் பணியினையே இன்வேட்டர் (Inverter) தடையற்ற மின்வழங்கியும் (Uninterrupted Power Supply (UPS) செய்கின்றன. ஆயினும் இவையிரண்டிற்கு  முள்ள வேறுபாடுகள்தான் யாவை?


தலைகீழாக்கி (Inverter):முக்கிய பகுதி ,(மின்சுற்று(Circuitry)),மின்கலன் ஆகிய இரண்டும் சேர்ந்தகட்டமைப்பே ஒரு தலைகீழாக்கி (Inverter) யாகும்.இந்த மின்கலன்களானது ஈயமும் நீர்மமும் சேர்ந்த மின்கலன் ,பராமரிப்பு தேவையற்ற காய்ந்த கட்டை மின்கலன் என இரண்டுவகையாகவுள்ளன.
ஒவ்வொரு தலைகீழாக்கியிலும் நேர் மின்விசையை (Direct Current (DC))மாற்று மின்விசையாக(Alternator Current (AC)) மாற்றிவழங்குவதற்காக  இதனுட்பகுதியில் ஒரு சிறிய மின்சுற்றும்(Circuitry) ஒரு பெரிய மின்மாற்றியும்(transformer) சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன.மின்தடங்கல் ஏற்படும் நேரங்களில் மின்கலன்களில் சேமித்து வைத்துள்ளமின்சாரத்தை  உடன் தொடர்ச்சியாக வழங்கிட சிறிது கூடுதலான காலஅவகாசத்தை இது எடுத்துகொள்கின்றது.

மேலும் சிலநேரங்களில் மின்னோட்டமானது மிகஅதிகமாகவும் (surge) ஒருசிலநேரங்களில் மிககுறைந்தும் ஏற்ற இறக்கத்துடன் மின்துள்ளாகவும் (Spike) இருந்திடும்.இந்நிலையில்  மின் ஓட்டத்தை சீராக பராமரித்திட உதவிடும் தானியங்கி மின்னோட்ட கட்டுபடுத்தி (Automatic Voltage Regulator(AVR))  என்ற அமைப்பு இதில் இல்லாததால் கம்பிவழியாக பெறுகின்ற மின்சாரத்தை அப்படியே நாம் பயன்படுத்திடும் மின்கருவிகளுக்கு இது கடத்திவிடுகின்றது.இதுபோன்ற சமயங்களில் நம்முடைய வீடுகளில் பயன்படுத்திடும் மின்விளக்குகள் ,மின்விசிறி போன்றமின்கருவிகள் ஓரளவிற்கு மட்டும் மின்ஏற்ற தாழ்வினை தாங்கி கொள்கின்றன.ஆனால் கணினி ,மருத்துவகருவிகள் போன்றமின்னனுகருவிகள் பழுதடைய வாய்ப்பாகின்றது..

தடையற்றமின்வழங்கி(Uninterrupted Power Supply (UPS)): இதில் முக்கிய பகுதி (மின்சுற்று(Circuitry)),மின்கலன் ஆகிய இரண்டுடன்  கூடுதலாக தானியங்கி மின்னோட்ட கட்டுபடுத்தி (Automatic Voltage Regulator(AVR))யும் மின் உணர்வியும்(Sensor)சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது..மின்னோட்டமானது மிகஅதிகமாகவும் (surge) மின்துள்ளாகவும் (Spike) கம்பிவழியாக உள்வருவதை AVR  ஆல் கட்டுபடுத்திடமுடியாதிருந்திடும் நிலையில் .மின் உணர்வி(Sensor) ஆனது  UPS க்குள் வரும் மின்னோட்டத்தை தடைசெய்து மின்கலன்களில் சேமித்து வைத்துள்ள மின்சாரத்தை ஒரேசீராக நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.அவ்வாறே குறைந்த அளவிற்கு மின்னோட்டம் UPS க்குள் பெறப்படும் நிலையில்மின்கலன்களில் சேமித்து வைத்துள்ள மின்சாரத்தை அதனுடன் சேர்த்து ஒரேசீராக நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.
மின்தடங்கல் ஏற்படும் நேரங்களில் குறைந்தது கால் மணிநேரம் முதல் சில மணிநேரங்கள் வரை நம்முடைய மின்கலன்களின் திறனிற்கேற்ப தொடர்ச்சியாக  மின்சாரத்தை ஒரேசீராக இந்தUPS ஆனது நாம் பயன்படுத்துவதற்காக வழங்குகின்றது.மின்னனுகருவிகள் பயன்படுத்தப்படாத தொழிலகங்கள் வீடுகளுக்கு தலைகீழாக்கியையும் (Inverter),மின்னனுகருவிகள் பயன்படுத்தப்படுகின்ற மருத்துவமனை போன்ற இடங்களில் தடையற்ற மின்வழங்கியையும் (Uninterrupted Power Supply (UPS))  உபயோகபடுத்திகொள்வது நல்லது.
நான்கு அறைகள் கொண்ட ஒருவீட்டில் நான்கு குழல் விளக்குகள் ஒவ்வொன்றும் 40 -80 வாட் மின்சாரம் பயன்படுத்திகொள்ளும்.நான்கு மின்விசிறி ஒவ்வொன்றும் 100 -150 வாட் மின்சாரம் பயன்படுத்தி கொள்ளும்.60 வாட் கொண்ட குண்டு மின்விளக்குகள் இரண்டு குளியறைக்காக,தொலைக்காட்சிபெட்டியொன்று,  பொருட்களை பாதுகாத்திட உதவும் குளிர்பதனபொட்டியொன்று ஆகியவை கொண்ட ஒருவீட்டில் பயன்படுத்திடும் மொத்த மின்சாரம் 1000வாட்ஆகின்றது.இவைகள் நன்கு சீராக இயங்குவதற்கு 20- 50 சதவிகிதம் கூடுதலாக அதாவது 1500வாட் என்றவாறு மின்சாரம் செலவாகும் என எடுத்துகொள்வது நல்லது. அதிலும்  குளிர்பதனபெட்டி இயங்கதொடங்குவதற்கு மட்டும் 200 சதவிகிதம் மின்சாரத்தை எடுத்துகொள்ளும் என்பதையும் கணக்கில்கொண்டால் ஏறத்தாழ2000வாட் என்றவாறு ஒருவீட்டிற்கு மின்சாரம் செலவாகும் என்றவாறு இவைகளை கொள்முதல் செய்வதற்கான கணக்கீடுசெய்து எடுத்துகொள்வதே மிகவும் நல்லது.
இவ்வாறான கணக்கீட்டின்போது வீட்டு பயன்பாட்டின் மின்உபயோகம் 2500 – 3000 வாட் வரையிலும் இருந்திடும் நிலையில் தலைகீழாக்கியை (Inverter) அல்லது தடையற்ற மின்வழங்கியை (Uninterrupted Power Supply (UPS)) பயன்படுத்திகொள்க.அதற்குமேல் இருந்திடும் நிலையில் மின்னாக்கியை(Generator) பயன்படுத்திகொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை: