ஞாயிறு, 16 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.4

இந்த பதிவில் முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களை பற்றி பார்க்கலாம். பல்பை பொருத்துவதற்கு ஹோல்டர் (HOLDER) பயன்படுகிறது. பட்டன் ஹோல்டர்,  ஆங்கிள் ஹோல்டர்,   பென்டன் ஹோல்டர் என மூன்று வகைப்படும். படத்தை பார்க்கவும்.




minsaraulagam
   பட்டன் ஹோல்டர்
minsaraulagam
ஆங்கிள் ஹோல்டர்

minsaraulagam
 பென்டன் ஹோல்டர்













minsaraulagam
சீலிங் ரோஸ்



அடுத்தபடியாக சீலிங்ரோஸ். இது வயரிங் பாயிண்டிலிருந்து சீலிங் பேன், சீலிங்கில் தொங்க விடப்படும் லைட்டுகள், டியூப் லைட் ஆகியவற்றிற்கு மின் இணைப்பை தர உபயோகப்படுத்தப்படும் சாதனமாகும். படம் கீழே தரப்பட்டுள்ளது.





minsaraulagam
3 பின் பிளக் சாக்கெட், 2-பின் பிளக் சாக்கெட்( இவற்றை நாம் பேச்சு வழக்கில் பிளக் பாய்ண்ட் என சொல்லுவோம்), 3-பின் பிளக் டாப், 2 பின் பிளக் டாப்(இவற்றை பிளக் என சொல்லுவோம்) இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவைகளே. படம் போட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை.


இனி நாம் உபயோகப்படுத்தும் "EXTENSION PLUG BOX" அசெம்பிள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். நாம் எல்லோரும் கம்பியூட்டருக்கு இந்த பாக்ஸ்-ஐ பயன் படுத்துவோம்.



நாம் இப்பொழுது பார்க்கப்போவது ஒரு இண்டிகேட்டர், இரண்டு சுவிட்ச்கள், இரண்டு பிளக்குகள் உள்ள பாக்ஸ் ஆகும்.

தேவையான பொருட்கள்.
1. கேங் பாக்ஸ் (for 3 switches + 2 three pin sockets. Back side covered) = 1
2. இண்டிகேட்டர் = 1
3. 5ஆம்பியர் சுவிட்ச் = 2
4. 3 கோர் வயர் = 5 மீட்டர்
5. 5 ஆம்பியர் 3 பின் டாப் =1
6. 5 ஆம்பியர் 3பின் சாக்கெட்.

கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியுள்ளபடி கேங் பாக்ஸ்-ல் இண்டிகேட்டர், சுவிட்ச், சாக்கெட் எல்லாவற்றையும் மாட்டவும்.
minsaraulagam
3 கோர் வயரின் ஒரு நுனியில் 1 அடி நீளத்திற்கு மேல் சிலீவை (SLEEVE) நீக்கி விடவும். இப்பொழுது 1 அடி நீளத்திற்கு உள்ளே இருக்கும் 3 வயர்களும் தனித்தனியாக இருக்கும். இவற்றின் நிறம் சிகப்பு, கருப்பு, பச்சை என இருக்கும். சிகப்பு கலர் வயரை பேஸ்-க்கும், கருப்பை நியூட்ரலுக்கும், பச்சையை எர்த்-க்கும் உபயோகிக்கவும். கீழே உள்ள படத்தில் காட்டிய்படி சுவிட்ச், சாக்கெட், இண்டிகேட்டர் ஆகியவற்றை இந்த வயரால் இணைக்கவும்.
minsaraulagam
இந்த கேங் பாக்ஸ்-ல் நீங்கள் செய்துள்ள வயரிங் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதன் பின் இந்த பாக்சின் பின் புற மூடியை பொருத்தவும். 3 கோர் வயரின் மறு நுனியில் சுமார் 2 அங்குலத்திற்கு வெளிப்புற சிலீவை நீக்கி, 3 வயர்களையும் வெளியே எடுக்கவும். 3பின் டாப்பின் மேல்புறத்தில் உள்ள ஸ்குருவை கழற்றுங்கள். இப்பொழுது பிளக்கின் மூடி தனியாக வந்துவிடும். படத்தில் காட்டியபடி இணைப்பை கொடுக்கவும்.
இப்பொழுது EXTENTION POWER BOX ரெடியாகிவிட்டது.

குறிப்பு: வயரின் மீதுள்ள இன்சுலேஷன் (பிளாஸ்டிக்) -ஐ நீக்கி செப்பு கம்ம்பியை நன்றாக முறுக்கிய( TWIST) பின்பே அதை இணைக்க வேண்டும்.

இப்பொழுது இந்த பாக்ஸ்-ன் பிளக் டாப்பை வீட்டிலுள்ள பிளக்கில் மாட்டினால், போர்டுக்கு மின் சப்ளை வரும். போர்டிலுள்ள இண்டிகேட்டர் லைட் எரியும். முதல் சுவிட்ச்சை ஆன் செய்தால் முதல் பிளக்கிற்கு மின்சார சப்ளை கிடைக்கும். அதை போலவே இரண்டாவது பிளக்கிற்கும் சப்ளை வரும்.

இனி இந்த பாக்ஸ் எப்படு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். பிளக் டாப்பின் எர்த் முனை(பச்சை நிற வயர்) பாக்ஸில் உள்ள பிளக் சாக்கெட்களின் எர்த் முனைகளுடன் நேரடியாக் இணைக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே பிளக் டாப்பின் நியூட்ரல் முனை(கருப்பு நிற வயர்) பிளக்குகளின் நியூட்ரல் முனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. லைன் அல்லது பேஸ் வயர்(சிகப்பு நிற வயர்) பிளக் டாப்பில் இருந்து பாக்ஸின் சுவிட்ச்களின் கீழ் பக்கமுள்ள கனெக்டரில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது நீங்கள் பிளக் டாப்பை வீட்டிலுள்ள பிளக்கில் இணைக்கும் பொழுது எர்த், நியூட்ரல் ஆகியவற்றின் இணைப்பு நேரடியாக பிளக் சாக்கெட்டிற்கு கிடைக்கும். ஆனால் பேஸ் அல்லது லைன் சப்ளை பிளக் சாக்கெட்டுக்கு கிடைக்காது. அது சுவிட்ச்களின் கீழ் பக்க இணைப்புடன் நின்று விடும். நீங்கள் சுவிட்ச்சை ஆன் செய்தால், சுவிட்ச்சின் இரு முனைகளுக்கும் தொடர்பு கிடைக்கும். அப்பொழுது சுவிச்சின் மேல் முனை வழியாக பேஸ் பிளக் சாக்கெட்டிற்கு வரும். சுவிட்ச்சை ஆஃப் செய்து விட்டால் சுவிட்ச் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிளக்கிற்கு சப்ளை வருவது நின்று விடும்.

இந்த முறையில் நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பல பிளக்குகள் கொண்ட பாக்ஸ்-ஐ தயார் செய்யலாம்.

இதே பாக்சில் பியூஸ் யூனிட்டை இணைக்க வேண்டும் என்றால் எளிதாக செய்யலாம். பியூஸ் யூனிட், சுவிட்ச்சு, இண்டிகேட்டர் எல்லாமே ஒரே அளவு கொண்டைவைதான். எனவே 4 சுவிட்ச் + 2 3பின் சாக்கெட்டுக்கான கேங் பாக்ஸை வாங்கினால் அதிகப்படியாக இந்த பியூஸ் யூனிட்டை இணைக்க முடியும். அவ்வாறு செய்யும் பொழுது, முதலில் பியூஸ் யூனிட் அதன் பின் இண்டிகேட்டர் என பொறுத்த வேண்டும். 3கோர் வயரில் உள்ள சிகப்பு வயரை பியூஸ் காரியரின் ஒரு முனையில் இணைக்க வேண்டும். மறுமுனையை இண்டிகேட்டரில் இணைக்கவேண்டும்.

இப்பொழுது பேஸ் சப்ளையானது பியூஸ் யூனிட்டினுள் சென்று அதில் நாம் மாட்டியிருக்கும் பியூஸ் வயர் வழியாக மறு முனையை அடைந்து இண்டிகேட்டர் மற்றும் சுவிச்சு-களுக்கு செல்லும். பாக்ஸிலோ அல்லது இந்த பாக்ஸில் உள்ள பிளக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களிலோ ஏதாவது ஷார்ட் சர்க்குயூட் இருந்தால் பியூஸ் யூனிட்டில் பியூஸ் போய் விடும்.

மீண்டும் சந்திப்போம்..................

கருத்துகள் இல்லை: