ஞாயிறு, 16 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.2

ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ், நியூட்ரல் என்ற இரு முனைகள் உண்டு என முன் பதிவில் பார்த்தோம். அதில் நியூட்ரல் என்பது நமக்கு மின்சாரத்தை வழங்கும் டிரான்ஸ்பார்மர்-ன் எர்த் ஆகும். பேஸ் என்ற முனையில் மட்டுமே மின்சாரம் வரும். எனவே நியூட்ரல் நம் உயிருக்கு எவ்வித ஆபத்தையும் உண்டாக்காது. பேஸ் வயரை மட்டும் நாம் கவனமாக கையாள வேண்டும். மின்சாரத்தை கடத்தக்கூடிய அதாவது மின்சாரம் எளிதில் செல்லக்கூடிய பொருட்கள் Good Conductor எனவும், மின்சாரத்தை கடத்தாத பொருட்கள் Bad Conductor என சொல்லப்படும்.


Good Conductor : உதாரணம்-உலோகங்கள், தண்ணீர். இவற்றின் வழியாக மின்சாரம் எளிதில் பாயும். அதனால்தான் உலோகக்கம்பிகள் (செம்பு, அலுமினியம்) மின்சார வயரிங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Bad Conductor: ரப்பர், பிளாஸ்டிக், காய்ந்த மரக்கட்டை, பீங்கான் போன்றவை. இவை மின்சாரத்தை கடத்தாது. அதனால்தான் ஆரம்ப காலத்தில் ரப்பரும் தற்சமயம் பிளாஸ்டிக்கும் வயர்களின் மேல்பகுதியில் பாதுகாப்பு கவசமாக (இன்சுலேட்டர்) பயன்படுத்தப்படுகிறது. அதைப்போலவே சுவிட்ச்கள், பிளக், ஹோல்டர் போன்ற எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் பிளாஸ்டிக்கினாலும், பியூஸ் கேரியர் பீங்கானிலும் செய்யப்படுகிறது.

இனி கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு 230V பல்பு ஒன்று வீட்டு மின்சாரத்தில்(230V AC) இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் முனை வழியாக 230V மின்சாரமானது பல்பின் ஒரு முனை வழியாக சென்று பல்பினுள் உள்ள டங்ஸ்டன் இழை வழியாக மறு முனைக்கு வருகிறது. அதிலிருந்து நியூட்ட்ரல் முனைக்கு சென்று மின்சுற்றை(CIRCUIT) பூர்த்தி செய்கிறது.

BULP+CONN

அதாவது பல்பு 230V மின் அழுத்தத்தில் இயங்கக்கூடியது என்பதால் பேஸ் முனை வழியாக பல்புக்குள் சென்ற மின்சாரத்தின் மின் அழுத்தம் முழுமையாக டங்ஸ்டன் இழையால் பெறப்பட்டு விடுகிறது. மின்சாரம்(ELECTRICITY) என்பது மின் அழுத்தம்(வோல்ட்) + கரண்ட்(CURRENT-AMPERE) ஆகும். இதைப்பற்றி விரிவாக எனது சூரிய ஒளி மின்சாரம் தொடர் பதிவில் ஆரம்ப பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் இழை, குறிப்பிட்ட வெளிச்சத்தை தர தேவையான கரண்டை எடுத்துக்கொள்வதால் பல்பு எரியும். நியூட்ரல் என்பதும் எர்த்-தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டவே படத்தில் மின் சப்ளையின் நியூட்ரல் முனை எர்த் செய்யப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்பொழுது, இந்த மின் இணைப்பில் 230V பல்புக்கு பதில் 110V பல்பை இணைத்தால் என்னவாகும்? அல்லது 400வாட் பல்பை இணைத்தால் என்னவாகும்? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றினால், உங்களுக்கு இஞ்சினீயரிங் மூளை இருக்கிறது என பொருள்.

230V மின் சப்ளையில் 110 வோல்ட் பல்ப் -ஐ இணைக்கும் பொழுது 230 V மின் அழுத்தம் பல்பின் ஒரு முனை வழியாக டங்ஸ்டன் இழைக்குள் செல்லும். அந்த இழை 110V மின் அழுத்தத்தை தாங்க கூடியது என்பதால் 110V மின் அழுத்தம் போக மீதி உள்ள 120V மின் அழுத்தம் டங்ஸ்டன் இழையின் மறுமுனை வழியாக வெளியே வந்து நியூட்ரலில் சேரும். நியூட்ரலும் எர்த் என்பதால் அந்த 120V மின் அழுத்தம் குறுகிய மின் இணைப்பு (SHORT CIRCUIT) ஆகிவிடும். அப்பொழுது எலெக்ரான்களின் மோதலால் சூடு ஏற்படும். பியூஸ் காரியரில் போடப்பட்டிருக்கும் பியூஸ் வயரை விட டங்ஸ்டன் இழை மெல்லியதாக இருப்பதால், அது உருகிவிடும். அதாவது பல்பு பியூஸ் ஆகிவிடும்.

இனி 400V பல்பை இணைத்தால், நம் மின் சப்ப்ளையின் மின் அழுத்தத்தை விட அந்த பல்பின் டங்ஸ்டன் இழைக்கு 170V மின் அழுத்தம் அதிகம் தேவை. அதனால் அது வடிவமைக்கப்பட்ட திறனுக்கு அதனால் வெளிச்சம் தர முடியாமல் மங்கலாக எரியும்.மேலும் அது முழு திறனுடன் எரிய அதிக அளவு கரண்டை எடுக்கும். இதனால் பியூஸ் வயர் சூடாகி உருகிவிடும். குறைந்த மின் அழுத்தம் இருக்கும் பொழுது மின் சாதனங்களை உபயோகிக்க கூடாது.

நாம் வெற்று காலுடன் தரையில் நின்று கொண்டு மின்சாரத்தின் பேஸ் முனையை கையால் தொட்டால் அல்லது நாம் தரையில் நிற்கும் பொழுது மின்சாரத்தின் பேஸ் நம் மீது பட்டால் என்ன நடக்கும்? கீழே உள்ள படம் விளக்குகிறது.



நம் கையின் வழியாக மின்சாரம் உடலில் பாய்ந்து கால்வழியாக தரை எனப்படும் எர்த்தை வந்தடைகிறது. நியூட்ரலும் எர்த்தும் ஒன்றுதான் என ஏற்கனவே சொல்லியுள்ளேன். எனவே மின் சுற்று பூர்த்தியாகிறது. நம் உடல் ஈரப்பதம் உடையதால், அது டங்ஸ்டன் இளை போல செயல்பட்டு உடல் கருகிவிடும். எனவே

danger
1. மின்ச்சரத்தின் பேஸ் முனையை தொடக்கூடாது.

2. மின்சார வேலை செய்யும் பொழுது காலில் ரப்பர் செறுப்பு அணிய வேண்டும் அல்லது காய்ந்த மரப்பலகையின் மீது நிற்க வேண்டும் , கயில் ரப்பர் கையுறை அணியவேண்டும். நம் உடலின் எந்த பகுதியும் தரையையோ, சுவற்றையோ தொடக்கூடாது.

3. நாம் உபயோகிக்கும் ஸ்குரு டிரைவர், கட்டிங் பிளையர் ஆகியவற்றின் கைப்பிடி, நல்ல இன்ஸ்சுலேட்டிங் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். இவற்றின் உலோகப்பகுதியை கை தொடாதவாறு இதை உபயோகிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்..................

கருத்துகள் இல்லை: