ஞாயிறு, 16 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.3

முந்தைய பதிவில் காட்டப்பட்ட அதே படம் ஒரே ஒரு மாற்றத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நியூட்ரல் லைன் இணைப்பிலாமல் உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை காட்ட பெருக்கல் அடையாளம் போடப்பட்டுள்ளது. இப்பொழுது என்ன நடக்கும்?


minsaraulagamமின் சப்ளையின் பேஸ் முனை வழியாக பல்புக்குள் சென்ற பேஸ், சப்ளையின் (பிளக் பாய்ண்ட் என வைத்துக்கொள்ளலாம்) நியூட்ட்ரல் முனைக்கு வரும். ஆனால் அந்த முனையின் நியூட்ரல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், நியூட்ரல் கிடைக்காமல் அந்த நியூட்ரல் முனையிலும் பேஸ் சப்ளை வரும். இதை ரிட்டர்ன் சப்ளை (RETURN SUPPLY) என குறிப்பிடுவார்கள். மீட்டர் போர்டிலிருந்து சுவிட்சு போர்டு வரை எங்கு நியூட்ரல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரிட்டர்ன் சப்ளை ஏற்படும்.

இனி மின்சார வேலை செய்வதற்கு தேவையான கருவிகள் பற்றி பார்க்கலாம்.

1.லைன் டெஸ்டர்:
minsaraulagam
இதன் நுனிபகுதி ஸ்குரு டிரைவராக இருக்கும். நடுவில் நியான் பல்பு இருக்கும். இதன் மேல் நுனியில் ஒரு உலோகத்திலான பட்டன் இருக்கும். இது மின் சப்ளை இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்ய அவசியம் தேவை. ஸ்குரு டிரைவர் நுனியை வயரின் செப்பு கம்பியின் மேலோ அல்லது பிளக் பாய்ண்டினுள்ளோ வைக்கும் பொழுது ஒரு விரல் மேலே சொன்ன பட்டன் மேல் இருக்க வேண்டும். மின்சாரம் (பேஸ்) இருந்தால் அது ஸ்குரு டிரைவர் நுனிவழியாக உள்ளே சென்று நியான் பல்பு மற்றும் அதனுடன் உட்புறம் இணைக்கப்பட்டிருக்கும் பல மெக் ஓம் மதிப்புள்ள ரெசிஸ்டர் வழியாக விரல் நுனியை வந்தடைந்து நம் கால் வழியாக எர்த்தை சென்றடையும். அப்பொழுது மின்சுற்று பூர்த்தி அடைவதால் நியான் பல்பு எரியும். நாம் செருப்பு அணிந்திருந்தால் மங்கலாக நியான் பல்பு எரியும். நாம் டெஸ்ட் செய்யும் வயர் நியூட்ரலாக இருந்தால் நியான் பல்பு எரியாது. டெஸ்டர் எவ்விதம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படங்கள் விளக்கும்.
minsaraulagam



2.CUTTING PLIER
வயரை வெட்ட, வயரின் பி.வி.சி இன்சுலேஷனை நீக்க, வயர்களை ஜாயிண்ட்              போட          கட்டிங்         பிளையர் (CUTTING PLIER)  தேவை.




3.WIRE STRIPPER & CUTTER
செப்பு கம்பி வெட்டுப்படாமல் இன்சுலேஷனை கட்டிங் பிளையர் வைத்து நீக்க மிக கவனம் தேவை. இந்த வேலையையும், வயரை வெட்டும் வேலையையும் செய்ய ஸ்ட்ரிப்பர் (STRIPPER) கட்டரை உபயோகிப்பது எளிதானது.






4.SCREW DRIVER 
ஸ்குரு டிரைவர். டெஸ்டரை வைத்து பலமாக ஸ்குருவை கழ்ட்டவோ அல்லது மாட்டவே செய்யக்கூடாது. அவ்வறு செய்தால் கைப்பிடி தனியாக உடைந்து வந்து விடும். பிளக், ஸ்சுவிட்ச் போன்றவற்றில் இருக்கும் பித்தளை ஸ்குருக்களை கழற்ற அல்லது டைட் செய்ய மட்டுமே டெஸ்டரை பயன்படுத்த வேண்டும். பலமான வேலைகளுக்கு கனமான கைப்பிடி கொண்ட ஸ்குரு டிரைவரையே உபயோகிக்க வேண்டும். இது பல சைஸ்களில் கிடைக்கிறது.

  
5. hammer  
சுத்தியல். சுவரில் ஆணி அடிப்பதற்கு பயன் படுகிறது. 











6. hacksaw  frame

ஆக்ஸாஃபிரேம். பைப்புகள், மரப்பலகைகள் போன்றவைகள் அறுக்க பயன்படுகிறது.  




insulation tape 

இன்ஸ்சுலேசன் டேப் என்பது வயர்களை ஜாயிண்ட் செய்யும் பொழுது செப்புகம்பி வெளியே தெரியும். இதன் மேல் பாதுகாப்பாக இன்சுலேசன் செய்ய பயன்படுத்தப்படுகிறது.



கருத்துகள் இல்லை: