சனி, 29 ஜூன், 2013

மின்சாரம் பற்றிய வரலாறு -2

கெரிக்கின் சோதனைக்கு பிறகு மக்களுக்கு மின்சாரத்தின் மேல் ஆர்வம் வந்து அதை பற்றி அறிய ஆரம்பித்தார்கள். ஸ்டீபன் கிரே என்ற ஆங்கிலேயர் தானும் சில சோதனைகளை மேற்கொண்டார். அவர் கண்ணாடியை ‘எலக்டிரிக்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார் அது பெரிய அளவிலும் மலிவாக கிடைத்தது. கெரிக்குக்கு கண்ணாடி ஒரு நல்ல ‘எலக்டிரிக்’ என்று தெரிந்து இருந்தால் அவர் அதை உடைத்து இருக்க மாட்டார். கண்ணாடி உபயோகித்து கந்தகத்தை தவிர்த்து இருப்பார். கிரே ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு காலி கண்ணாடி குழாயை தேய்த்தார். அது இறகுகளை ஈர்த்தது தேய்க்கல் மின்சாரம் அதில் ஏறி இருந்தது. கண்ணாடி குழாய் இரண்டு முனைகளிலும் திறந்து இருந்ததால் தூசி முதலியவை அவருடைய சோதனையை கெடுக்கும் என்ற கிரே எண்ணினார். அதனால் இருமுனைகளிலும் கார்க் கொண்டு அடைத்தார். (தக்கை) என்ன ஆச்சரியம் தக்கையும் இறகுகளை ஈர்த்தது.


ஆனால் தக்கையை கிரே தேய்க்கவே இல்லை. கண்ணாடி குழாயின் மின்சாரம் தக்கைக்கும் பரவியது. இது முடியுமா ? மின்சாரம் பரவ, செல்ல முடியுமா ? இதை ஆராய கிரே மேலும் பல சோதனைகளை மேற்கொண்டார் கிரே ஒரு 10cm நீளமுள்ள ஒரு குச்சியை எடுத்துக் கொண்டார். அதை ஒருமுனை கண்ணாடி குழாயின் முனையில் உள்ள தக்கையில் நுழைத்தார். குச்சியின் இன்னொரு முனையில் தந்தத்தில் செய்த ஒரு பந்தை பொருத்தினார்.

இப்பொழுது அவர் கண்ணாடியை மட்டும் உரசினார் தக்கையையோ, குச்சியையோ அல்லது தந்த பந்தையோ தொடவில்லை. ஆனால் இறகுகள் மறுபடியும் தந்த பந்தால் ஈர்க்கப்பட்டன.

மின்சாரம் பரவியது சந்தேகமே இல்லை. தண்ணீர், காற்று, கண்ணாடி குழாய் வழியாக செல்ல முடியும். திரவ, வாயு பொருட்கள் ‘செல்ல முடியும்’, ‘பாய முடியும்’. நதி ஒடுவது பாய்வது திரவத்தின் பாய்ச்சல் வாயுக்களும் அதே மாதிரி செல்ல முடியும். திரவ வாயுக்கள் ஆங்கிலத்தில் “ப்ளுயுட்” (நிலையாக இல்லாதவைகள்) என்ற லத்தின் வார்த்தையால் கூப்பிடபடுகின்றன.

கிரே மின்சாரமும் வாயு திரவங்கள் மாதிரி செல்லும் என்று காண்பித்த பிறகு மக்கள் அதை மின்சார ப்ளுயுட் என்று சொல்ல ஆரம்பித்தனர். அடுத்தது அது எவ்வளவு தூரம் பாயும் என கிரே கண்டுபிடிக்க விரும்பினர். தந்த பந்தை ஒரு நூல் கட்டி தக்கையில் இருந்து தொங்கவிட்டார். கண்ணாடி குழாய், தக்கை அதே மாதிரி இருக்க கண்ணாடி குழாய் தேய்த்த போது தந்த பந்து இறகுகளை மீண்டும் ஈர்த்தது கிரே மேலும் மேலும் நீளமான நூல்களை உபயோகித்து அதின் முனையில் தந்த பந்தை தொங்க வைத்து பார்த்தார். 9 மீட்டர் நீளமான நூலை உபயோகப்படுத்தினார். அதற்கு மேலும் நீளம் வேண்டும் மென்றால் அவர் வீட்டின் கூரை மேல் நின்று நூலை தொங்க விட வேண்டி வந்தது. அதனால் தொழிற்சாலையின் கூரையில் பல ஆணிகள் அடித்து நூலை அங்கும் இங்குமாக மாட்டி விட்டார். இந்த மாதிரி அவர் 100 மீட்டர்கள் நூலை முன்னும் பின்னுமாக மாட்டி விட்டார். ஒரு முனையில் தந்த பந்தையும் இன்னொரு முனையில் கண்ணாடி குழாயையும் தொங்கவிட்டார்.

minsaraulagamஆனால் இப்போது தந்த பந்து இறகுகளை ஈர்க்கவில்லை. வெகு நேரம் கண்ணாடி குழாயை தேய்த்தாலும் ஈர்ப்பு சக்தி வரவில்லை. மின்சாரம் பாய்வது, செல்வது நின்றுவிட்டது. நூலின் நீளம் மிக அதிகமோ ? அதனால் மின்சாரம் பாய்வதற்கு முடியாத அளவை நூல் எட்டி விட்டதா ? இருக்க முடியாது. ஏன் என்றால் கண்ணாடி குழாய் கூட ஈர்க்கவில்லை. கண்ணாடி குழாயை   எவ்வளவு நேரம் தேய்த்தாலும் இறகுகளை ஈர்க்கவில்லை. மின்சாரம் பாய்வது எதனலோ நின்று விட்டது. நூல் நீளம் வெகு அதிகமோ ? மின்சாரம் செல்ல முடியாத அளவு நீளத்துக்கு நூல் நீளம் அதிகரித்துவிட்டதா ? இல்லை நூல் நீளம் ஒரு பிரச்சனை இல்லை. ஏனென்றால் கண்ணாடி குழாயே இறகுகளை ஈர்க்கவில்லை. மின்சாரம் பாய்வது நிற்கவில்லை. மின்சாரமே அதில் இல்லை. ஏதோ ஒரு காரணத்தினால் அவர் முன்னால் செய்யாத ஏதோ ஒன்று சோதனையை கெடுத்துவிட்டது. அது ஏதுவாக இருக்கும் ? முதல் சோதனையில் நூல் வெறுமனே தொங்கி கொண்டிருந்தது. இப்போது அது ஆணியில் மாட்டப்பட்டிருந்தது ஆணி வழியாக மின்சாரம் வீட்டின் கூரை வழியாக வெளியே சென்றுவிட்டதோ ?

ஆணிகள் தடித்து இருந்தால் மின்சாரம் அதன் வழியாக வெளியே சென்று விட்டதோ. அதற்கு பதிலாக மெலிதான ஒரு பொருளை உபயோகித்தால் மின்சாரம் பாயுமோ ? கிரேயிடம் மெலிதான சில்க் நூல் இருந்தது. மெலிதான ஆனால் உறுதியான சில்க் நூல் கிரே ஒவ்வொரு ஆணியிலும் சில்க் நூலை கட்டினார். சில்க் நூலின் மறு நுனியை தந்த பந்தை தொங்க விட்டிருந்த நூலில் கட்டினார். இப்போது மின்சாரம் மெலிதான சில்க் நூல் வழியே தான் ஆணிகளை அடைய வேண்டும் மெலிதான நூல் வழியே மின்சாரம் ஆணிக்கு போக முடியாவிட்டால் சில்க் நூலில் மின்சாரம் தங்கிவிடும் மறுபடியும் சோதனை வெற்றி அடையும்.

minsaraulagam இதை அவர் செய்தார். சோதனை வெற்றி அடைந்தது. மின்சாரம் 30 மீட்டர் நூல் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பாய்ந்தது. நூல் முனையில் கண்ணாடி குழாயை தேய்த்தால் மறுபடியும் அது இறகுகளை ஈர்த்தது.

கிரே மேலும் மேலும் நீளமான சில்க் நூலை உபயோகித்தார். கடைசியில் நூல் வெகு கனமாகவே சில்க் நூல் அறந்துவிட்டது மெலிய சில்க் நூலுக்கு பதிலாக பித்தளை கம்பியை உபயோகித்து பார்த்தார். ஆனால் மின்சாரம் பாயவில்லை. மின்சாரம் பித்தளை கம்பி வழியாக வெளியே போய் விட்டதோ ?

நூல் அல்லது பித்தளை கம்பி எவ்வளவு மெலிது என்பதை விட அது எதனால் செய்யப்பட்டது என்பது முக்கியம் என்பதை கிரே உணர்ந்தார். அவர் மேலும் பல சோதனைகள் செய்து உலோக கம்பிகள் மின்சாரத்தை எளிதில் கடத்தின என கண்டுபிடித்தார். அதனால் உலோகம் அல்லது மின்சாரத்தை எளிதாக கடத்தும் பொருள்களுக்கு அவர் ‘கடத்திகள்’ அல்லது ‘எளிதில் கடத்திகள்’ என்று பெயரிட்டார். சில்க் போன்ற மின்சாரத்தை எளிதில் கடத்தாதவைகளுக்கு அரிதில் கடத்திகள் அல்லது கடத்தாதவைகள் என்று பெயரிட்டார்.

ஆம்பர் கண்ணாடி, கந்தகம் இவைகளை உரசினால் ஏன் மின்சாரம் தன்மை பெற்றன என்று கிரேவுக்கு புரிய ஆரம்பித்தது. அரிதில் கடத்திகள் மின்சாரத்தை கடத்த முடியவில்லை ஆதலால் உரசலினால் ஏற்பட்ட மின்சார தன்மை எங்கும் போக முடியாமல் அதிலேயே தங்கிவிட்டது. உலோகம் போன்ற எளிதில் கடத்திகளை உரசினால் அதை தொட்ட எந்த பொருளுக்கும் மின்சாரம் பாய்ந்தது கடத்திகள் அரிதில் கடத்திகளை தொட்டால் மின்சாரம் கடத்திகளுக்கு வந்து விட்டது. கி.பி 1731 ல் கிரே தமது இந்த தத்துவத்தை சோதனை செய்தார். ஆம்பர் போன்று பிசின் கட்டி மேல் உலோக கட்டிகளை வைத்தார். ஒரு சில்க் கைக்குட்டையினால் உலோகத்தை உரசினார். சில்க், பிசின், காற்று இவைகள் தான் உலோகத்தை தொட்டன. அவை எல்லாமே அரிதில் கடத்திகள் உலோகத்தை உரசினது மின்சாரம் உண்டு பண்ணியது.

minsaraulagam ஆனால் மின்சாரம் தப்பித்து செல்ல முடியவில்லை ஏன் என்றால் உலோகத்தை தொட்டுக் கொண்டிருந்த பொருள்கள் எல்லாமே அரிதில் கடத்திகள். இப்போது உலோகம் இறகுகளை ஈர்த்தது. மின்சாரம் அதில் தங்கிவிட்டது. கிரே ஒரு சிறுவனை உறுதியான கயிறு கொண்டு கூரையில் இருந்து தொங்கவிட்டார். அவன் கைகளை சில்க் கொண்டு உரசினார். சிறிது நேரம் கழித்து சிறுவனின் துணிகள் அவன் மேலும் இறகுகள் ஈர்க்கப்பட்டன. எதை உரசினாலும் மின்சார தன்மை வரும் என்று கிரே நிரூபித்து விட்டார்.

கருத்துகள் இல்லை: