ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!

ஒல்லிக்குத்தான் மவுசு!

மின்சாரம் வந்த புதுசில் பயன்படுத்தப்பட்ட குண்டு பல்புகளையே இப்போதும் பயன் படுத்தி வருகிறோம். கேட்டால் குண்டு பல்புக்கு குறைந்த மின்சாரம் போதும் என்கிறோம். குண்டு பல்புக்கு பதிலா குறுகிய குழல் விளக்குகளை பயன்படுத்தலாம். குண்டு பல்பைவிட இந்த விளக்குகளில் 40 சதவீதம் மின்சாரம் மிச்சம்! குண்டு பல்பைவிட விலை கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்கும்.

அப்படியே போடாதீங்க...!

சிலர் தேங்காய்(Coconut), நிலக்கடலை(Ground Nut), மஞ்சள்(Turmeric), இஞ்சி(Ginger) போன்ற பொருட்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டாமல் அப்படியே மிக்ஸியில் போட்டு அரைப்பார்கள். இது மிக்ஸிக்கு நல்லதல்ல. இதனால் மிக்ஸி(Mixi) சீக்கிரத்திலேயே அரைக்கும் தன்மையை இழந்துவிடும்.

ரொம்ப நேரம்...

கிரைண்டர் நீண்ட நேரம் ஓடியும் மாவு அரை படவில்லையா? கிரைண்டரின் கல் பகுதியை கொத்துங்க... இல்லாட்டி பெல்ட் லூசாக இருக்கிறதா... வேறு எதுவும் பிரச்னையா? என்று பார்த்து சரி செய்யுங்க...

டேபிள்டாப் பெஸ்ட்!

புதுசா கிரைண்டர் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்... வழக்கமான கிரைண்டரை வாங்க வேண்டாம். டேபிள்டாப் கிரைண்டர் வாங்குங்க. ஏன்னா... டேபிள்டாப் கிரைண்டர்(Tabletop Griender) எடையும் குறைவு, மின்சாரமும் சிக்கனம். இடத்தையும் அடைக்காது. ஈசியா சுத்தம் பண்ணிடலாம்.

அவசரம்... அவசியம்!

கேஸ் அடுப்பில் பிரச்சினையே ரப்பர் குழாய்தான். நாளாக நாளாக ஆங்காங்கே இற்றுப் போய் கேஸ் கசிய ஆரம்பிக்கும். இப்போ ரப்பர் குழாய்க்கு மேல் மெல்லிய கம்பிவலை பொருத்தப்பட்ட குழாய்கள் வந்தாச்சு. அத வாங்கி மாட்டிடுங்க.

சுத்தம் எப்பவும் நல்லது!

கேஸ் அடுப்பை எப்பவும் சுத்தமா வச்சுக்கங்க... தினமும் இரவு துடைப்பது நல்லது. வாரத் துக்கு ஒரு தடவை பர்னரை கழற்றி, சோப்பு தண்ணிரை வைத்து நன்றாக கழுவி துடைத்தால் அதிக நாள் உழைக்கும்.

ரிப்பேர் வேண்டாம்!

கேஸ் அடுப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் வால்வை மூடவும். பின்னர் கேஸ் ஏஜென்ஸியின் சர்வீஸ் மெக்கானிக்கை வைத்து ரிப்பேர் பார்க்கவும். எக்காரணம் கொண்டும் நீங்களாக சரி செய்ய முயற்சிக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை: